| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

கலெக்டர் அவசரகால உதவி எண்கள் அறிவிப்பு...!

by Vignesh Perumal on | 2025-11-29 02:45 PM

Share:


கலெக்டர் அவசரகால உதவி எண்கள் அறிவிப்பு...!

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையின் காரணமாகவும், அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், பொதுமக்கள் மழைக்காலங்களில் ஏற்படும் இடர்பாடுகள், பாதிப்புகள் மற்றும் உதவித் தகவல்களைத் தெரிவிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் அவசரகால உதவி எண்கள் மற்றும் வாட்ஸ்அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்படும் இடர்பாடுகள் குறித்துத் தகவல் தெரிவிக்க, பொதுமக்கள் மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளலாம்.

மாவட்ட அவசர கட்டுபாட்டு அறை எண்கள்: 044-27664177, 044-27666746, 044-27660035, 044-27660036, வாட்ஸ்அப் எண்கள்: 9444317862 - 9498901077 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் இந்த அவசரக் கட்டுப்பாட்டு அறைகள் 24 மணி நேரமும் செயல்படும் எனவும், பொதுமக்கள் இந்த எண்களைப் பயன்படுத்தி மழை வெள்ளம், மரம் விழுதல், மின்சாரம் தொடர்பான பாதிப்புகள் உள்ளிட்ட அனைத்து இடர்பாடுகள் குறித்த தகவல்களையும் தெரிவித்து உரிய உதவியைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.










நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள் 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment