| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

விமான நிலையத்தில் சிக்கிய இந்தியர்கள்...! அவசர உதவி மையம்..! தூதரகம் அதிரடி நடவடிக்கை..!

by Vignesh Perumal on | 2025-11-29 02:29 PM

Share:


விமான நிலையத்தில் சிக்கிய இந்தியர்கள்...! அவசர உதவி மையம்..!  தூதரகம் அதிரடி நடவடிக்கை..!

இலங்கையில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சூழல் காரணமாகக் கொழும்பில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்தில் (கட்டுநாயக்க) சிக்கித் தவிக்கும் இந்தியப் பயணிகளுக்கு உதவுவதற்காக, இலங்கைக்கான இந்திய தூதரகம் அவசர உதவி மையத்தை அமைத்துள்ளது.

விமான நிலையத்தில் சிக்கியுள்ள இந்தியப் பயணிகள், உணவு, குடிநீர் அல்லது வேறு எந்த உதவி தேவைப்பட்டாலும், உடனடியாகத் தூதரகம் அமைத்துள்ள அவசர உதவி எண்ணைத் தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பயணிகள் உதவிக்குத் தொடர்புகொள்ள வேண்டிய எண்:+94 773727832 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், விமான நிலையத்தில் சிக்கியுள்ள இந்தியர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவசியத் தேவைப்படும் பயணிகளுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பயணிகளின் பாதுகாப்பு மற்றும் பிற அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதிசெய்யத் தூதரக அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.

இந்தியர்கள் யாரும் பதற்றப்படத் தேவையில்லை என்றும், நிலைமை சீராகும் வரை பொறுமை காக்குமாறும் இந்தியத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.










நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment