| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

தமிழகத்தில் இந்த பகுதிகளுக்கு'ரெட் அலர்ட்'...! எச்சரிக்கை..!

by Vignesh Perumal on | 2025-11-29 01:40 PM

Share:


தமிழகத்தில் இந்த பகுதிகளுக்கு'ரெட் அலர்ட்'...!  எச்சரிக்கை..!

தமிழகத்தில் நிலவி வரும் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் காரணமாக, இன்று (நவம்பர் 29, 2025) செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இன்று அதிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . குறிப்பாக செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று 20 செ.மீட்டருக்கு அதிகமான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்களும், மாவட்ட நிர்வாகங்களும் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கனமழை அல்லது மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால், பின்வரும் மாவட்டங்களுக்கு இன்று 'ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை (நவம்பர் 30, 2025) மேலும் சில மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாளைக்கான (ஞாயிற்றுக்கிழமை) 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் உள்ளன.

பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறும், மழை பாதிப்புத் தொடர்பான தகவல்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் அவசர உதவி எண்களைப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.









நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள் 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment