by admin on | 2025-11-29 09:27 AM
கும்பகோணத்தில் தேசிய மாணவர் படை முகாமில் நான்கு மாவட்ட வீரர்கள் 'தேர்ச்சி'!
கும்பகோணம்: கல்வி மற்றும் ஒழுக்கத்தை ராணுவப் பயிற்சியோடு இணைக்கும் மகத்தான நிகழ்வாக, கும்பகோணத்தில் நடைபெற்ற 10 நாள் தேசிய மாணவர் படை (NCC) ஒருங்கிணைந்த பயிற்சி முகாம் (CATC) இளைஞர் சக்தியின் எதிர்கால நம்பிக்கையை உறுதி செய்துள்ளது.நவம்பர் 17 முதல் 26 வரை கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியில் நடந்த இந்த முகாமில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 500 மாணவ-மாணவிகள் உறுதியான ஒழுக்கத்துடன் பயிற்சிகளை நிறைவு செய்தனர்.
மேலும் தேசத்தின் சவால்களுக்குத் தயாராகும் பயிற்சி முகாமின் முக்கிய நோக்கம், மாணவர்களை ராணுவப் பணிக்குத் தயார் செய்வது மட்டுமல்லாமல், சமூகத்தில் பொறுப்புள்ள குடிமக்களாக மாற்றுவதே ஆகும். அதன்படி, 19 ராணுவ வீரர்கள் மற்றும் 9 NCC அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில், மாணவர்களுக்குப் பின்வரும் அரிய திறன்கள் கற்றுக் கொடுக்கப்பட்டன.
ராணுவக் கட்டளைகள் மற்றும் அணிவகுப்பு (ட்ரில்) உடல் கட்டுப்பாடு மற்றும் கூட்டு உணர்வு மேம்பாடு.போர்க்காலத் திறன்கள் (Map Reading & Reconnaissance) வரைபட வாசிப்பு மற்றும் எதிரி முகாம்களைக் கண்டறியும் உத்திகள்.(முக்கிய விழிப்புணர்வு) தீயணைப்பு மற்றும் புற்றுநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு வகுப்புகள் நடைபெற்றது.
*தலைமைப் பண்பு மலர்ந்த தருணம்* அதனைத் தொடர்ந்து
முகாமின் நிறைவு விழா, NCC-யின் உயரிய அதிகாரியான கமாண்டிங் ஆபிசர் கர்னல் சேது மாதவன் தலைமையில் நடைபெற்றது. அவர், பயிற்சி முகாமின் வெற்றிக்குக்காரணமாக இருந்த மாணவர்களின் உறுதிப்பாட்டைப் பாராட்டினார்.விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் பாலமுருகன் மற்றும் கல்வி புலத்தலைவர் முனைவர் ருக்மாங்கதன் ஆகியோர், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கி கௌரவித்தனர்.
*முகாம் அதிகாரி கருத்து:*
தொடர்ந்து இந்த 10 நாட்கள் மாணவர்கள் வெறும் பயிற்சிகளை மட்டும் கற்கவில்லை. அவர்கள் இக்கட்டான சூழ்நிலைகளைச் சமாளிக்கும் மன உறுதி, தலைமைப் பண்பு மற்றும் காலத்தை மதிக்கும் ஒழுக்கம் ஆகியவற்றைக் கற்றுள்ளனர். இந்த மாணவர்கள் அனைவரும் தேசத்தின் நம்பிக்கைக் கதிர்கள்," என்று கர்னல் சேது மாதவன் தெரிவித்தார். இந்த ராணுவப் பயிற்சி, நாளைய இந்தியாவை வழிநடத்தப் போகும் இந்த இளைய தலைமுறைக்கு வலிமையையும், தன்னம்பிக்கையையும் அளித்துள்ளது.
நிருபர் அ, மகேஷ்