by admin on | 2025-11-26 05:23 AM
பாஜக தேசிய தலைவர் அறிவிப்பு... அண்ணாமலைக்கு டெல்லி அழைப்பு... தமிழகத்தை குறிவைத்து பாஜக போடும் வியூகம்...
கடந்த ஜனவரி மாதேமே வர வேண்டிய பாஜக தேசிய தலைவர் அறிவிப்பு பல்வேறு காரணகளால் தொடர்ந்து தள்ளி சென்றது. இந்நிலையில் பீகார் தேர்தல் முடிந்ததும் பாஜக தேசிய தலைவரை முடிவு செய்யலாம் என பாஜக தலைமை பீகார் தேர்தலில் கவனம் செலுத்தியது, தற்பொழுது பீகார் தேர்தல் முடிந்த நிலையில் பாஜக தேசிய தலைவரை அறிவிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது டெல்லி பாஜக தலைமை.
இந்நிலையில் தற்போது பாஜக தேசிய தலைவருக்கான பரிசீலனையில் மூவர் உள்ளனர், அதில் மத்திய அமைச்சர் தர்மேந்திரப்பிரதான், மத்திய விவசாய துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவ்க்கான், மத்திய அமைச்சர் மனோகர் கட்டார் ஆகியோர் பெயர் பரிசீலனையில் இதுவரை இருந்து வந்தது. இதில் அடுத்தடுத்து வர இருக்கும் மாநில தேர்தல்கள், மற்றும் 2029ம் நாடாளுமன்ற தேர்தல்களை குறிவைத்து தேசிய தலைவர்களை தேர்வு செய்துள்ளது பாஜக டெல்லி தலைமை.
அதில் 60 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க கூடாது, அமைப்பு ரீதியாக வேலை செய்த அனுபவம் இருக்க வேண்டும், இதனடிப்படையில்,56 வயதான தர்மேந்திரபிரதானுக்கு தேசிய தலைவராக அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவராஜ் சிங் சவகான் மற்றும் மனோகர் கட்ட்டார் ஆகியோர் 60 வயது கடந்துவிட்டதால் அவர்களுக்கு வாய்ப்பில்லை என்றும், மேலும் தர்மேந்திரா பிரதான் சமிபதியில் நடந்த ஹரியானா , பீகார் தேர்தல் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் என்பதும் குறிப்பிடதக்கது.
பீகார் தேர்தலில் வேட்பாளர் தேர்வு தான் , மிக பெரிய அளவில் வெற்றி பெற பாஜக காரணம் என்றும், அந்த வகையில் ஒவ்வொரு வேட்பாளரையும் நேரடியாக தர்மேந்திர பிரதான் தான் தேர்வு செய்துள்ளார். இதே போன்று ஹரியனா தேர்தலிலும் வேட்பாளர்களை தர்மேந்திரபிரதான் தான் தேர்வு செய்து இருக்கிறார். இப்படி ஒவ்வொரு மாநில தேர்தல் பணியில் கிராஸ் ரூட் வரை சென்று கட்சி நிர்வாகிகளிடம் பழக கூடியவர் தான் தர்மேந்திர பிரதான் என்பது குறிப்பித்தக்கது.
கடந்த 2022 உத்திரபிரதேச தேர்தலில் பாஜக 285 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம், தர்மேந்திர பிரதான் தேர்வு செய்த வேட்பாளர் தான் காரணம் என்பது குறிப்பிடதக்கது. கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு நடந்த 5 மாநில தேர்தலில் பாஜக தொடர்ந்து வெற்றி பெற்று வருவதற்கான முக்கிய காரணம் தர்மேந்திரா பிரதான் தான் என்றும், 2014ல் அமித்ஷா செய்த செயலை அப்படியே தற்பொழுது தர்மேந்திர பிராதான் செய்து வருகிறார்.
இந்நிலையில் இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடித்தாலும் கூட, மேற்கு வங்கம் மட்டும் தமிழ்நாடு மட்டுமே பாஜகவுக்கு மிக பெரிய சவாலாக இருந்து வருகிறது, அந்த வகையில் அடுத்து தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் நடக்கும் தேர்தலில் முழு கவனத்தை செலுத்த இருக்கும் பாஜக , மேற்கு வங்கத்தில் ஏற்கனவே எதிர்க்கட்சியாக இருப்பதால் வரும் தேர்தலில் ஆட்சியை பிடித்து விடலாம் என்கிற நம்பிக்கையில் உள்ளது.
ஆனால் பாஜகவுக்கு தற்பொழுது தமிழகம் மிக சவாலாக இருக்கிறது, அந்த வகையில் விரைவில் பாஜக தேசிய தலைவராக தர்மேந்திர பிரதான் நியமிக்க பட இருப்பதாக டெல்லியில் இருந்து வரும் தகவல் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், பாஜக தேசிய நிர்வாக பட்டியலும் வெளியாக இருக்கிறது,இதில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொதுச் செயலாளர் மற்றும் தென்மாநில பொறுப்பாளர் ஆகிய பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் டிசம்பர் முதல் வாரம் அண்ணாமலை டெல்லி வர டெல்லி பாஜக தலைமையிடம் இருந்து அழைப்பு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக தமிழக தேர்தல் வியூகம் குறித்து ஆலோசிக்கவே அண்ணாமலைக்கு டெல்லியில் இருந்து அழைப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
T. Muthu kamatchi evidence editor. 9842337244