by admin on | 2025-11-17 05:55 PM
இன்று கார்த்திகை மாதத்தின் முதல் நாளை முன்னிட்டு ஆண்டிப்பட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பால விநாயகர் கோவிலில் சிறுவர் சிறுமியர் பெரியவர்கள் என நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் அதிகாலை முதலே வரிசையாக வந்திருந்து "சாமியே சரணம் ஐயப்பா" என்ற கோஷம் முழங்க சபரிமலைக்கு மாலை அணிந்து தங்களின் மண்டல பூஜைக்கான விரதத்தை தொடங்கினர்
கார்த்திகை மாதம் முதல் நாளான இன்று அதிகாலை முதலே தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பால விநாயகர் கோவிலில் நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் தங்களது குடும்பத்தினரோடு வரிசையாக வந்திருந்து விநாயகரை வேண்டி விநாயகருக்கு முன்பு மண்டியிட்டு சாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷம் முழங்க கோவில் பூசாரியின் மூலம் மாலை அணிந்து மண்டல பூஜைக்கான தங்களின் விரதத்தை தொடங்கினர்.இதற்காக சபரிமலைக்கு புதிதாக மாலை அணியும் பக்தர்கள் சந்தன மாலை மற்றும் துளசி மாலையையும், 18 ஆண்டுகளாக தொடர்ந்து மாலை அணிந்து செல்லும் பக்தர்களான குருசாமிகள் ருத்ராட்ச மாலைகளையும் அணிந்து தங்களின் விரதத்தை தொடங்கியுள்ளனர்.இதனால் அதிகாலை முதலே "சாமியே சரணம் ஐயப்பா" சாமியே சரணம் ஐயப்பா"என்ற சரண கோஷ சத்தம் கோவிலில் ஒலித்து கொண்டே இருந்தது.