by admin on | 2025-11-13 07:39 PM
வைகைஅணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 2492 கன அடியாக உள்ளது.
பெரியார் கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 1930 கன அடி வீதம் கால்வாய் நிரம்பும் அளவிற்கு தண்ணீர் திறக்கப்பட்டு செல்வதாலும்,58கால்வாய் வழியாக 62கன அடி தண்ணீரும், வினாடிக்கு 500 கன அடி வீதம் மதுரை மாவட்டத்தின் முதல் பூர்வீக பாசனபகுதி நிலங்களுக்கு வைகைஆற்றின் வழியாக தண்ணீர் திறக்கப்படுவதாலும் தேனி, மதுரை ஆகிய இரண்டு மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கும், பெரியார் கால்வாய் செல்லும் வழித்தடத்தில் அமைந்துள்ள மக்களுக்கும் பொதுபணித்துறையினர் சார்பில் எச்சரிக்கை
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள மொத்தம் 71 அடி உயரம் கொண்ட வைகைஅணையின் நீர்மட்டம் 67.59 அடியாக உள்ள நிலையில் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 2492 கன அடியாக உள்ளது.பெரியார் கால்வாய் பாசனத்திற்கு பெரியார் கால்வாய் நிரம்பி தண்ணீர் செல்லும் அளவிற்கு வினாடிக்கு 1930 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுவதாலும், 58 கால்வாய் வழியாக வினாடிக்கு 62 கன அடி வீதம் உசிலம்பட்டி தாலுகாவில் உள்ள கண்மாய் பகுதிகளுக்கு திறக்கப்படுவதாலும், வினாடிக்கு 500 கன அடி வீதம் வைகைஆற்றின் வழியாக மதுரை மாவட்டத்தின் முதல் பூர்வீக பாசனபகுதி நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்படுவதாலும் தேனி, மதுரை ஆகிய இரண்டு மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கும், பெரியார் கால்வாய் செல்லும் வழித்தடத்தில் அமைந்துள்ள மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக பொதுமக்கள் யாரும் ஆபத்தை உணராமல் வைகைஆற்றிலோ பெரியார் கால்வாயிலோ குளிப்பதற்காக இறங்க வேண்டாம் என்றும், வைகை ஆற்றையோ கால்வாயையோ கடக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் பொதுபணிதுறையினர் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.தற்போதைய நிலவரப்படி வைகைஅணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1745கன அடியாகவும் வைகை அணையில் நீர் இருப்பு 5223மில்லியன் கன அடியாகவும் உள்ளது.
செய்தியாளர் முத்துக்குமார் தேனி, 9842337244
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்...!!! கலெக்டர் ரஞ்சித் சிங் நலத்திட்ட உதவிகள் வழங்கல்...!!!
கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது...!!!
திமுக நகராட்சி தலைவரின் குடோனில் அமலாக்கத்துறை சோதனை....!!!
தீப்பிடித்த காரில் உயிருடன் எரிந்து...! ஆய்வாளர் சலீமத் உயிரிழப்பு..! பெரும் பரபரப்பு...!
விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியனுக்கு...! 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை...! நீதிமன்றம் உத்தரவு..!