| | | | | | | | | | | | | | | | | | |
தேசிய செய்திகள் india

மீனவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முயற்சியா....???

by admin on | 2025-11-13 02:21 PM

Share:


மீனவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முயற்சியா....???

*சிறப்புத் தீவிர திருத்தப்பணி பெயரில் ஒரு இன அழிப்பு*

அவசர அவசரமாகக் கொண்டுவரப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப்பணி-2025 கன்னியாகுமரி மாவட்ட மீனவ மக்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கைவதற்காக உருவாக்கப்பட்ட சதி வேலையாகப் பார்க்கிறோம். ஏற்கனவே ஒரு தேர்தலில் ஓட்டுப்போடச் சென்ற மீனவர்களில் 40000 பேரின் வாக்குகளை நீக்கிய கொடுமை கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் நடந்ததை நாடே அறிந்தது. காரணம் கன்னியாகுமரி மாவட்ட கடல் மீனவர்களும் உள்நாட்டு மீனவர்களும் எக்காரணம் கொண்டும் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று தெரிந்துகொண்ட ஆர்எஸ்எஸ் பாஜக பரிவானங்கள் திட்டமிட்டு செய்த சதி வேலை அதில் இருந்தது. 

  இப்போது தீவிர திருத்தப்பணி என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் பாஜக பரிவாரங்கள் தேர்தல் ஆணையம் மூலமாக மீனவ இனத்தையே அழிக்கின்ற ஒரு வேலையை செய்துகொண்டிருக்கிறது. SIR பணி ஒருமாதம் நடைபெறும் என்றும் டிசம்பர் 4-ம் தேதி நிறைவுபெறும் என்றும் படிவங்கள் கொடுக்கும் பணி வேகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. திருத்தப்பணி ஒருமாத காலத்திற்குள் நிறைவு பெறாது. அவசர அவசரமாக இப்பணிகளை முடித்து அதற்குள் படிவங்களைக் கொடுக்க முடியாதவர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவதற்காக எடுக்கப்படும் சதிச்செயல் என்று பல மட்டங்களிலிருந்தும் விமர்சனங்கள் எழுகின்ற வேளையில் மீனவர்களின் நிலமையோ படுமோசமாக இருக்கிறது. காரணம் மீனவர்கள் கரையில் இல்லை. கடலுக்குள் மீன்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவாரம் பத்துநாள் என்று ஆழ்கடலில் தங்கி மீன்பிடித்துக் கொண்டு கரைக்கு வந்தாலும் மீன்களை விற்பனை செய்துவிட்டு உடனடியாக மீண்டும் கடலுக்குச் செல்வதிலேயே முனைப்பு காட்டுவார்கள். 

  அதுமட்டுமல்லாமல்கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் சுறா மீன் பிடிப்புக்காக ஆழ்கடலில் 45 நாள்முதல் 60 நாட்கள்வரை கடலுக்குள்ளேயே இருப்பார்கள். இவர்களால் ஒருமாதகால அவகாசத்தில் நடக்கும் சிறப்புத் தீவிர திருத்தப்பணியில் எப்படி கலந்துகொள்ள முடியம்?கடலுக்குள் இருக்கும் மீனவர்களுக்கு கால அவகாசம் கொடுக்காமல் நடத்தப்படும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி என்பது மீனவர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கி ஒரு இன அழிப்பு வேலையைச் செய்யத்தான் துணைபுரியும். எனவே, உச்சநீதி மன்றம் மீனவர்களின் நிலையை கருத்தில் கொண்டு அவசரமாக நடக்கும் திருத்தப்பணியை நிறுத்தி எல்லா மக்களுக்குமான நீதி வழங்கவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். 

*குறும்பனை பெர்லின்* நெய்தல் மக்கள் இயக்கம் 

குமரி மாவட்டம்.


T. முத்து காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர். 9842337244

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment