| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Chennai

ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் பறிமுதல்...! கலெக்டர் கடும் எச்சரிக்கை...!

by Vignesh Perumal on | 2025-11-08 03:12 PM

Share:


ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் பறிமுதல்...! கலெக்டர் கடும் எச்சரிக்கை...!

சென்னை மாநகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பான பயணத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இளஞ்சிவப்பு (Pink) ஆட்டோக்களை ஆண்கள் இயக்கினால் அவை பறிமுதல் செய்யப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, 'சென்னை மாநகரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தனியாகப் பாதுகாப்பாகப் பயணம் செய்ய ஏதுவாக, பெண்களுக்கான உதவி எண் மற்றும் ஜிபிஎஸ் (GPS) கருவி பொருத்தப்பட்ட இளஞ்சிவப்பு ஆட்டோ சேவை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்தத் திட்டத்தின்கீழ், ஒரு இலட்சம் ரூபாய் மானியம் மற்றும் வங்கிக் கடனுதவியுடன் ஆட்டோக்கள் வழங்கப்பட்டன.

இந்த இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் சிலர் சென்னையில் பல இடங்களில் ஓட்டி வருவதாக தொடர்ந்து புகார்கள் பெறப்பட்டன. இது தொடர்பாகச் சமூக நலத்துறை கள ஆய்வுக் குழு ஆய்வு மேற்கொண்டதில், சில இடங்களில் ஆண்கள் ஆட்டோக்களை ஓட்டி வந்தது கண்டறியப்பட்டது.

தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளின் கீழ், இந்த இளஞ்சிவப்பு ஆட்டோக்களை பெண்கள் மட்டுமே இயக்க ஆணையிடப்பட்டுள்ளது. இந்த விதிகள் குறித்துப் பயனாளிகளுக்குப் பலமுறை எடுத்துரைக்கப்பட்ட பின்னரும் விதிமீறல் தொடர்கிறது. சமூக நலத்துறை ரீதியாக எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்னரும், தொடர்ந்து ஆண்கள் பிங்க் ஆட்டோக்களை ஓட்டி வருவது கண்டறியப்பட்டால், தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளின் கீழ் ஆட்டோக்கள் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெண்களின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக அரசு வழங்கும் திட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் நோக்குடன் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.









நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள் 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment