| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

டிஜிபி நியமன விவகாரம்..!!! தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்..!!!

by admin on | 2025-11-07 06:34 PM

Share:


டிஜிபி நியமன விவகாரம்..!!!  தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்..!!!

டிஜிபி நியமன விவகாரம்..???

தமிழ்நாடு DGP நியமன விவகாரம் : உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் 

யு.பி.எஸ்.சி பரிந்துரையை அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறை இயக்குநரை நியமிக்க தவறிய தமிழ்நாடு அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி கிஷோர் கிருஷ்ணசாமி என்பவர் தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவுதமிழ்நாட்டுக்கு புதிய காவல்துறை டிஜிபி நியமனம் செய்யாமல் பொறுப்பு டி.ஜி.பி நியமித்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஹென்றி திபேன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்

அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு, காவல்துறை இயக்குனரை விரைந்து நியமிக்க உத்தரவிட்டது குறிப்பாக யுபிஎஸ்சி பரிந்துரை கிடைத்தவுடன் உடனடியாக தமிழ்நாடு காவல்துறை டிஜிபி நியமனம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்ததுஇந்நிலையில் காவல்துறை டிஜிபி பெயரை இறுதி செய்து யுபிஎஸ்சி தமிழ்நாடு அரசுக்கு வழங்கிய நிலையில் புதிய டிஜிபி நியமனம் செய்யப்படாமல் உள்ளது

இது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அவமதிக்கும் செயலாகும் எனவே உச்ச நீதிமன்ற உத்தரவை மீறிய தமிழ்நாடு அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிஷோர் கிருஷ்ணசாமி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம்,  அவமதிப்பு மனுவுக்கு 3 வாரத்தில் பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.


T. Muthu kamachi  events editor. 9842337244

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment