| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்க துணை இராணுவத்தை அனுப்பி வைக்க வேண்டும். விவசாயிகள் சங்கம்..!!! கோரிக்கை

by admin on | 2025-11-02 08:44 AM

Share:


முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்க துணை இராணுவத்தை அனுப்பி வைக்க வேண்டும். விவசாயிகள் சங்கம்..!!! கோரிக்கை

*1956 மொழிவழிப்பிரிவினை மோசடியால் நாங்கள் இழந்த தமிழ் நிலம்*தேவிகுளம் தாலுகாவில் நிரந்தரமாக வசிக்கும் தமிழர்கள் வெறும் 26 விழுக்காடுதான், மற்ற 46 விழுக்காடு தமிழர்கள், தினசரி வந்து போகக்கூடிய கூலிக்காரர்களே என்று, மொழி வழி பிரிவினை கமிட்டியிடம், திரு கே. எம். பணிக்கர் முன்வைத்த வாதம் , எத்தனை போலியானது என்பதை இன்று அம்பலப்படுத்துகிறேன்.

திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸின் பிரதிநிதிகள், மொழிவழி பிரிவினைக்குழுவில் முன்வைத்த வாதப்படி... தேவிகுளம் தாலுகாவில் 72 விழுக்காடு தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பதாகும். என்னைப் பொறுத்தவரை இந்தக் கணக்கே தவறுதான்.ஏனென்றால்... ஒட்டுமொத்தமாக கணக்கில் எடுத்துக் கொண்டால்கூட, தேவிகுளம் தாலுகாவில் 93 விழுக்காடு தமிழர்கள் வாழ்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

(சமநேரத்தில் செங்கோட்டை தாலுகாவில் அன்றைக்கு வாழ்ந்த தமிழர்களின் விழுக்காடு 93 என்பதை மறந்து விடாதீர்கள்...ஆனாலும் செங்கோட்டை தாலுகாவின் மேற்கு பகுதியை, வஞ்சகமாக கபளீகரம் செய்தது கேரளா)தேவிகுளம் தாலுகாவில் இன்றைக்கு தமிழர்கள் வாழக்கூடிய பகுதிகளைப் பட்டியலிடுகிறேன்...இதில் பெரும்பாலான ஊர்களில், குறிப்பாக தேயிலைத் தோட்டங்களில், தமிழர்கள் 100 விழுக்காடு இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை..


உடுமலைப்பேட்டையில் இருந்து மூணாறு செல்லும் சாலையில் உள்ள...

மறையூர்,காந்தலூர்,கீழாந்தூர்,காரையூர்,கொட்டகுடி,கோடாந்தூர்,கோவில் கடவு,மேலாடி,பட்டிக்காடு,பள்ளநாடு,காபி ஸ்டோர்,லக்கம்,வாகுவாரை,தலையாறு வரை தமிழர்கள் எங்கு நோக்கினும் நிறைந்து கிடக்கிறார்கள்.இதில் மறையூர் சுற்றுவட்டாரத்தில் மட்டும், தமிழர்களிடம் நிலத்தை வாங்கி விவசாயம் செய்து வாழ்கிறார்கள்,,12 விழுக்காடு மலையாளிகள்...தலையாறிலிருந்துமேல் வாகுவாரை,தென்மலை விலக்கு,அங்கிருந்து மேலே சென்றால் சோத்துப்பாறை,குண்டுமலை வரை நூறு விழுக்காடு  தமிழர்கள் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தென்மலை விலக்கிலிருந்து கொஞ்ச தூரம் சென்றால் எதிர்கொள்ளும் ராஜமலை,பெட்டிமுடி,கன்னிமலை நயமக்காடு,கடலாறு,கல்லாறு பெரியபாறை,பெரியபாறை விரிவுமூணாறு வரை எங்கு நோக்கினும் தமிழர்கள் தமிழர்கள் தமிழர்கள் மட்டுமே...மறுபடியும் மூணாறில் இருந்து பழைய மூணாறு, சிவன்மலை, பார்வதிமலை, நாகர்முடி,ஒத்தப்பாறை,லட்சுமி,விரிபாறை,மாங்குளம் வரை இன்றளவும் தமிழர்கள் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.அதேபோல் மூணாறில் இருந்து கிளம்பிகிராம்ஸ்லேண்ட்,குண்டல,மாட்டுப்பட்டி,எல்லப்பட்டி,சிட்டிவாரை,செண்டுவாரை,டாப்ஸ்டேசனில் ஒரு பகுதி,கோவிலூர்,வட்டவடை,

கொட்டக்கம்பூர் உள்ளிட்ட 26 மலை கிராமங்கள் அத்தனையிலும், தமிழர் ஜனத்தொகை பெருத்துக் கிடக்கிறது.அதுபோல மூணாறில் இருந்து அடிமாலி செல்லும் சாலையிலுள்ள ஆனைச்சால்,சித்ராபுரம்,பள்ளிவாசல்,இரண்டாம் மைல், குஞ்சித்தண்ணி,பொட்டங்காடு, பைசன் வேலி, முட்டுக்காடு வரை குறைந்தது ஒரு ஊருக்கு, 40 விழுக்காடு முதல் 60 விழுக்காடு வரை தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.இதுபோக போடி மெட்டிலிருந்து சற்று கீழே இறங்கி பி.எல்.ராம், பவர் ஹவுஸ், மாநிலை,முதுவாக்குடி,சிங்க கண்டம்,சூரியநெல்லி,சூரியநெல்லி மேல்,ஆனையிரங்கல்,பெரியகானல், சின்னகானல்,

லாக்காடு,சொக்கநாடு,மூணாறு காந்தி காலனி,நடையாறுநல்லதண்ணிகுருமலை,,,,ஆகியன தமிழர்கள் 100 விழுக்காடு வாழக்கூடிய ஊர்கள் இது...இது வெறும் தேவிகுளம் தாலுகாவில் உள்ள ஊர்கள் மட்டும்தான். இதுபோக உடுமஞ்சோலை தாலுகாவிலும், பீர்மேடு தாலுகாவிலும் தமிழர்கள் 100 விழுக்காடு வாழக்கூடிய ஊர்கள் (எஸ்டேட்கள்) மட்டும் 140 க்கு மேல் இருக்கிறது...

25,000 ரூபாய்கள் விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ், தேயிலை கம்பெனிகள் கடந்த பத்தாண்டுகளில் வெளியேற்றிய தமிழர் எண்ணிக்கை மட்டும் 20 ஆயிரத்தைத் தாண்டும்... இவர்களும் இருந்திருப்பார்கள் ஆனால் இன்று தேவிகுளத்தில் தமிழர் ஒருவர் சுயேச்சையாக போட்டியிட்டு வெல்ல முடியும்.ப்ளாக் ரீதியாக எடுத்துக் கொண்டால்கூட, தேவிகுளம் தாலுகாவில் வரக்கூடிய 12 பிளாக்குகளில்...கண்ணன் தேவன் ஹில்ஸ் என்றழைக்கப்படும்,டாடா தேயிலை கம்பெனியின் கீழ் வாழக்கூடிய தமிழர்கள் எண்ணிக்கை மட்டும்

55,738.அதேபோல காந்தலூர் பிளாக்கில்-6,758.கீழாந்தூர்  பிளாக்கில் 4,205.கொட்டகம்பூர் பிளாக்கில் 2,405.மறையூர் பிளாக்கில் 12 ஆயிரத்து 399.வட்டவடை பிளாக்கில் 3,292.குஞ்சித்தண்ணி ப்ளாக்கில் 12,702.பள்ளிவாசல் பிளாக்கில் 10,775.மாங்குளம் ப்ளாக்கில் 9, 59என தமிழர் எண்ணிக்கை இன்றளவும் உச்சம் தொட்டுத்தான் இருக்கிறது.மன்னன்கண்டம் வெல்லத்தூவல் ஆனைவிரட்டி ஆகிய மூன்று பிளாக்குகளில் மட்டும் மலையாளிகளின் எண்ணிக்கை 50 விழுக்காடிருந்து 60 விழுக்காடு வரை இருக்கலாம்...எப்படிப் பார்த்தாலும் தேவிகுளம் தாலுகாவில் இன்றளவும் தமிழ்ச் சமூகம் மெஜாரிட்டியோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறது.

குறிப்பாகச் சொல்லப்போனால் மன்னன்கண்டம், வெள்ளத்தூவல்,ஆனைவிரட்டி ஆகிய மூன்று பிளாக்குகளில் வாழக்கூடிய மலையாளிகள்,மொழிவழி பிரிவினைக்கு பின்பு,அதாவது 1956 க்குப் பிறகு அந்தப் பகுதிகளில் குடியேறியவர்கள் என்பதுதான் இங்கு முக்கியமான விடயம்.இந்தக் குடியேற்றத்திற்கு பின்னால் இருந்தவர், ஆரம்பத்தில் பட்டம் தாணுபிள்ளை,அதற்குப்பின்னால் இந்த குடியேற்றவாசிகளுக்கு முழு சலுகையையும் கேரள அரசிடம் பெற்றுக் கொடுத்து, அவர்களை நிலையாக அங்கு தங்க வைத்ததில், மறைந்த கே எம் மாணிக்கு அளப்பரிய பங்குண்டு.கேரளத்து கலைஞர் கருணாநிதி என்று செல்லமாக அழைக்கப்படும் இந்த கே எம் மாணி,இந்தியாவிலேயே அதிக முறை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த ஒரே நிதி அமைச்சர்.

பாலா சட்டமன்றத் தொகுதியின் 54 ஆண்டுகால சட்டமன்ற உறுப்பினர்.இவர் தன்னுடைய கேரள காங்கிரஸ் கட்சியை இடுக்கி ஜில்லாவில் பலப்படுத்திக் கொள்ளும் பொருட்டு, இந்த மலையாள குடியேற்றவாசிகளுக்கு முழு ஆதரவையும் கொடுத்தார்.இன்றும் இடுக்கி மாவட்டத்திலுள்ள தொடுபுழா மற்றும் இடுக்கி சட்டமன்ற தொகுதிகள், நீண்டகாலமாக இவரது கட்சியின் கைப்பிடிக்குள் சிக்கிக் கிடக்கிறது.தொடுபுழாவில்  பி.ஜே.ஜோசப்பும்(இப்போது ஜோசப் காங்கிரஸ்)இடுக்கியில் ரோஸி அகஸ்டினும் இன்னமும் கேரள காங்கிரஸ் கட்சியின் சார்பில் அங்கு ஆளுமை செலுத்தி கொண்டிருக்கிறார்கள்.இதில் இந்த  பி.ஜே. ஜோசப் எப்போது நிறம் மாறுவார் என்று யாராலும் சொல்ல முடியாது...

இப்படியாக தமிழர்கள் இன்றளவும் பெரும்பான்மை காட்டும் தேவிகுளம் சட்டமன்ற தொகுதியில், எந்த அடிப்படையில் கே.எம். பணிக்கர்,26 விழுக்காடு அளவிலேயே, தமிழர்கள் நிரந்தரமாக வாழ்கிறார்கள் என்று சொன்னார் என்று எனக்குத் தெரியவில்லை...கண்ணெதிரில் இப்படி ஒரு அநியாயமான மோசடியை நடத்துவதற்கு... பணிக்கருக்கு எப்படி மனது வந்தது என்று தெரியவில்லை.இந்தத் தமிழர்கள் நிறைந்த தேவிகுளம் தாலுகா ஆண்டொன்றிற்கு கேரள அரசிற்கு கொடுக்கும் வரி வருவாய் மட்டும் 6.2 விழுக்காடு...

தேயிலை,சுற்றுலா,நட்சத்திர விடுதிகள்பாராகிளைடிங் பயிற்சி மையம்,டிரெக்கிங்,ஐந்து தேசிய பூங்காக்கள்,இரண்டு வனவிலங்கு சரணாலயங்கள் என பரந்து விரிந்து கிடக்கிறது எங்கள் முன்னோர்கள் கண்ணீரும் செந்நீரும் ஊற்றி வளர்த்த தேவிகுளம்...இதை கொடுப்பதற்கு எப்படி மனது வந்தது...மிஸ்டர்...எக்ஸ் களே...


ச.பென்னிகுயிக் பாலசிங்கம்.ஒருங்கிணைப்பாளர்பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.


T. Muthu kamachi evidence editor 9842337244

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment