| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

உங்களுடன் முதல்வர் ஸ்டாலின் திட்ட மூலம் பட்டா வழங்கல்..!!!

by admin on | 2025-10-31 05:05 AM

Share:


உங்களுடன் முதல்வர் ஸ்டாலின் திட்ட மூலம் பட்டா வழங்கல்..!!!

*100 ஆண்டுகாலக் காத்திருப்புக்கு முடிவு! கும்பகோணத்தில் 31 குடும்பங்களுக்கு 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் மூலம் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது,* 


கும்பகோணம்:அக்,29-

தமிழ்நாடு முதலமைச்சரின் நேரடித் திட்டங்களில் ஒன்றான "உங்களுடன் ஸ்டாலின்" முகாம் மூலம், கும்பகோணம் மாநகராட்சி 38-வது வார்டுக்குட்பட்ட சிங்கார தோப்பு தெருவில் வசித்து வந்த 31 குடும்பங்களுக்கு  (29.10.2025) அன்று இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டன.


சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வந்த இந்தப் பொதுமக்கள், தங்களுக்குச் சொந்தமான நில ஆவணங்கள் இல்லாத காரணத்தால் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வந்தனர். இந்த நிலையில் கும்பகோணம் மாநகராட்சி 38-வது வார்டு மாமன்ற உறுப்பினர் N, சரவணன் ஏற்பாட்டில் முகாமில் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவின்படி வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் இந்தப் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து 


கும்பகோணம் ராயா மஹால் மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில், மாவட்ட ஆட்சியர், பிரியங்கா பங்கஜம், தேசிய காங்கிரஸ் கமிட்டி மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா, MP கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க,அன்பழகன், துணை மேயர் சு.ப. தமிழழகன், மேயர் சரவணன், தாசில்தார், சண்முகம், மாநகராட்சி ஆணையர் காந்தி ராஜ், உள்ளிட்ட உயர் அதிகாரிகள், முன்னிலையில் வீட்டுமனை பட்டா விண்ணப்பித்திருந்த 31 குடும்பங்களுக்கு இலவச பட்டா வழங்கப்பட்டது, மேலும் இந்த நிகழ்ச்சியில்  திமுக முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள்  மற்றும் பொதுமக்கள் என திரளானோர் பங்கேற்றனர்.


நிருபர் அ, மகேஷ்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment