| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

தேவர் ஜெயந்தி விழா ...!!! போலீஸ் தடியடி..!! சாலை மறியல்...!!!

by admin on | 2025-10-30 09:30 PM

Share:


தேவர் ஜெயந்தி விழா ...!!! போலீஸ் தடியடி..!! சாலை மறியல்...!!!

ஆண்டிபட்டி அருகே தேவர் ஜெயந்தி விழாவில் போலீசார்  தடியடி . 

 போலீசாரை கண்டித்து சாலை மறியல் ஈடுபட்டதால் தேனி மதுரை சாலையில்  போக்குவரத்து பாதிப்பு. 


 ஆண்டிப்பட்டி அருகே உள்ள க.விலக்கு பகுதியில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு சுற்றுவட்டார கிராமங்களான முத்தனம்பட்டி பிராதுக்காரன்பட்டி, திருமலாபுரம், கரட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து மாலை அணிவித்து சென்றனர். ஒவ்வொரு கிராமத்தினரும்  ஆட்டம் பாட்டம், வெடி வெடித்தபடி வந்தனர். மேலும் இளைஞர்கள் பைக்குகளில் கூச்சலிட்டபடி  வந்தனர். அதிகமான கூட்டம் கூடியதால் அங்கு காவலில் இருந்த போலீசார் அவர்களை கட்டுப்படுத்த முயன்றனர்.

அப்போது இளைஞர்களுக்கும் போலீசார்களுக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றனர். இதனையடுத்து ஆத்திரமடைந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தேனி மதுரை சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட எஸ்பி சினேகப்பிரியா  அதிரடிப்படை போலீசார் விரைந்து வந்து கூட்டத்தை கலைந்து செல்ல வைத்தனர். அதன் பின்னர் தேனி மதுரை சாலையில்  நின்றிருந்த வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன. தேவர் ஜெயந்தி விழாவில் .  இளைஞர்களுக்கும் போலீசார்க்கும் நடந்த தள்ளுமுள்ளு ஏற்பட்டு போலீசார் தடியடி நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


செய்தியாளர் சிவமுத்து 9812337244

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment