by Vignesh Perumal on | 2025-10-30 01:04 PM
திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு, குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1 (JM-1) நீதிபதியைக் கண்டித்தும், அவரை உடனடியாக இடமாற்றம் செய்ய வலியுறுத்தியும் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இன்று (அக்டோபர் 30, 2025) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-இல் (JM-1) பணியாற்றும் நீதிபதி, வழக்கறிஞர்களிடம் கண்ணியக் குறைவாகவும், மிரட்டும் தொனியிலும் பேசுவதாகவும், அவர்களை அவமானப்படுத்துவதாகவும் வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குறிப்பாக, ஒரு வழக்கறிஞரை நோக்கி, "இந்த வழக்கறிஞரை கைது செய்யுங்கள்" என்று நீதிபதி கூறியதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், வழக்கறிஞர் சங்கத் தலைவர் குமரேசன் தலைமையில், செயலாளர் செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வழக்கறிஞர்கள், JM-1 நீதிமன்ற நீதிபதியின் கண்ணியக் குறைவான பேச்சைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், நீதிபதியை உடனடியாக வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். நீதிமன்றத்தின் செயல்பாட்டில் நீதிபதி - வழக்கறிஞர் உறவில் ஏற்பட்டுள்ள இந்த மோதல் போக்கு, நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்று நீதிபதி இடமாற்றம் செய்யப்படுவாரா என்பது குறித்து விரைவில் தெரியவரும்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்க துணை இராணுவத்தை அனுப்பி வைக்க வேண்டும். விவசாயிகள் சங்கம்..!!! கோரிக்கை
ஸ்ரீகாகுளம் கோயில் கூட்ட நெரிசல்...! 9 பேர் பலி...! பிரதமர் மோடி இரங்கல்...!
கொடூர சம்பவம்....! கூட்ட நெரிசல்...! ஏகாதசி தரிசனத்தில் 9 பேர் பலி...!
V O C நினைவு நாள் பேச்சு போட்டி
உங்களுடன் முதல்வர் ஸ்டாலின் திட்ட மூலம் பட்டா வழங்கல்..!!!