| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

தேவர் குருபூஜை எதிரொலி...! 7 டாஸ்மாக் கடைகள் இன்று மாலை முதல் தற்காலிகமாக மூடல்....! கலெக்டர் உத்தரவு....!

by Vignesh Perumal on | 2025-10-29 05:28 PM

Share:


தேவர் குருபூஜை எதிரொலி...! 7 டாஸ்மாக் கடைகள் இன்று மாலை முதல் தற்காலிகமாக மூடல்....! கலெக்டர் உத்தரவு....!

இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நாளை (அக்டோபர் 30) முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 118-வது பிறந்த நாள் மற்றும் குருபூஜை அனுசரிக்கப்பட உள்ளதை முன்னிட்டு, பொது அமைதியைப் பாதுகாக்கும் நோக்கில், திண்டுக்கல் மாவட்ட எல்லையோரப் பகுதிகளில் அமைந்துள்ள ஏழு அரசு மதுபானக் கடைகள் இன்று மாலை முதல் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொருட்டும், பசும்பொன் குருபூஜை நிகழ்வு அமைதியாக நடைபெறும் பொருட்டும், திண்டுக்கல் மாவட்ட எல்லையோரத்தில் உள்ள பின்வரும் ஏழு அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த பார்கள் மற்றும் தனியார் மனமகிழ் மன்றத்தில் அமைந்துள்ள மதுபானக் கூடம் ஆகியவற்றைத் தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் திரு. சரவணன், இ.ஆ.ப.அவர்கள் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, கொடைரோடு கடை எண். 3161, பள்ளப்பட்டி சிப்காட் கடை எண். 3342, கிருஷ்ணாபுரம் (மட்டப்பாறை) கடை எண். 3345, விளாம்பட்டி கடை எண். 3343, அணைப்பட்டி கடை எண். 3341, ரெங்கப்பநாயக்கன்பட்டி கடை எண். 3318, விருவீடு (சாந்திபுரம்) கடை எண். 3344 ஆகிய கடைகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, மேற்கண்ட கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் இன்று (அக்டோபர் 29) மாலை 6 மணி முதல் நாளை (அக்டோபர் 30) குருபூஜை தினம் முழுவதும் விற்பனையின்றி தற்காலிகமாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை ஒட்டி தென் மாவட்டங்களில் அதிகப்படியான காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு வரும் நிலையில், திண்டுக்கல் மாவட்ட எல்லையோரப் பகுதிகளில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இந்தக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment