| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

ஆரோக்கியத்திற்கு உணவைத் தேர்வு செய்யுங்கள் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி...!!!

by admin on | 2025-10-27 04:58 PM

Share:


ஆரோக்கியத்திற்கு உணவைத் தேர்வு செய்யுங்கள் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி...!!!

ஆரோக்கியத்துக்கு உணவை தேர்வு செய்யுங்க

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுரை 

பாக்கனா அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக உணவு மற்றும் அயோடின் பற்றாக்குறை தடுப்பு தினத்தை முன்னிட்டு கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் மற்றும் ஆக் தி சில்ட்ரன் ஆகியன சார்பில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் இப்ராஹிம் தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில் கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொதுச்செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது ஆரோக்கியமான உணவுகள் நமது உடலில் ஊட்டச்சத்துக்களை தரும். தற்போது உணவுகளில் பலவேறு உணவு கலப்படங்கள் மற்றும் மசாலா மற்றும் உணவு பொருட்களில் சேர்க்கப்படும் இரசாயனங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அமைகிறது. குறிப்பாக சுவை மற்றும் கெடாமல் இருக்க சேர்க்கப்படும் சேர்மங்கள் உடலில் நோய்களை உருவாக்குகிறது. எனவே சுவைக்காக உணவு தேர்வு செய்வதை விட ஆரோக்கியத்துக்கு உணவை தேர்வு செய்ய வேண்டும். அயோடின் பற்றாக்குறையால் மாணவர்கள் படிப்பு, திறன் வளர்ச்சி பாதிப்பு, மந்த தன்மை, உடல் வளர்ச்சி பாதிப்பு உள்ளிட்டவை ஏற்படும். எனவே அரசு ரேசன் கடைகளில் விற்பனை செய்யப்படும்  அரசு உப்பினை வாங்கி பயன்படுத்த வேண்டும். மேலும் ஊட்டச்சத்து குறைபாடுகளை தவிர்க்க செறிவூட்டப்பட்ட உணவுகளாக ரேசன் அரிசி, பாமாயில் மற்றும் கோதுமை, பால், சமையல் எண்ணெய்கள் ஆகியன உள்ளன அவற்றை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார். 

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  அஜித் பேசும்போது உணவு பொருட்கள் வாங்கும் தயாரிப்பு தேதி, கலாவதி தேதி, சேர்க்கப்பட்டுள்ள மூலப்பொருட்கள் ஊட்டச்சத்து விவரங்களை பார்த்து வாங்க வேண்டும். அதுபோல் வீட்டில் பாதுகாப்பின்றி வைத்தாலும் உணவு பொருட்கள் கெட்டுப்போகும் அவற்றை எடுத்துக்கொண்டாலும் உடல் உபாதைகள் ஏற்படும் உணவு ஆரோக்கியம் கருதி எடுத்துகொள்ள வேண்டும் என்றார்.நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


T. Muthu kamachi evidence editor. 9842337244

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment