by Vignesh Perumal on | 2025-10-24 01:00 PM
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ள நிலையில், இது வலுப்பெற்று அக். 27ஆம் தேதி புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தக் புயலுக்கு மோந்தா' (Montha) என்று பெயரிடப்பட்டுள்ளது.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தென் கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று (அக்டோபர் 24) ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது.
இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி, தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து, மேலும் வலுவடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து வலுப்பெற்று, வரும் அக்டோபர் 27ஆம் தேதி புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகும் இந்தப் புயலுக்கு, தாய்லாந்து நாடு பரிந்துரைத்த பெயரான 'மோந்தா' (Montha) என்று சூட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாகத் தமிழகத்தின் சில பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் (அக்டோபர் 24 மற்றும் 25) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த மிதமான மழை வருகிற அக்., 29 வரை நீடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
புயல் உருவாகும் சாத்தியக்கூறுகள் வலுப்பெற்றுள்ளதால், கடலோர மாவட்ட மக்கள் மற்றும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புயலின் நகர்வு மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து அடுத்தடுத்த அறிவிப்புகளை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
மக்களே உஷார்....! 'மோந்தா' புயல்..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
விளம்பர ஜாம்பவான் பியூஷ் பாண்டே காலமானார்...!
15 பேர் பலி..! 20க்கும் மேற்பட்டோர் காயம்..! குடியரசுத் தலைவர் இரங்கல்...!
கோரவிபத்து...! ஆம்னி பேருந்தில் பயங்கர தீவிபத்து..! 15 பேர் பலி..! 20க்கும் மேற்பட்டோர் காயம்..!
பசுமை பழனிக்காக மலைப்பகுதியில் அதிகாரிகள் செய்த செயல்...! மக்கள் வரவேற்பு....!