by Vignesh Perumal on | 2025-10-23 12:51 PM
சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) முக்கிய நிர்வாகியுமான திரு. கு. பொன்னுசாமி அவர்கள் மறைந்த செய்தியறிந்து தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: "சேந்தமங்கலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், அருமைச் சகோதரர் திரு. கு. பொன்னுசாமி அவர்கள் மறைந்த துயரச் செய்தியறிந்து நான் மிகவும் வருந்தினேன். அவர், சேந்தமங்கலம் தொகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்று, தொடர்ந்து இரண்டு முறை அவர்களது பிரதிநிதியாகச் சட்டமன்றத்தில் மக்கள் பணியாற்றியவர். அவரது மறைவு, அத்தொகுதி மக்களுக்கும், ஒட்டுமொத்த திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
கழகத்தின் மீது தீவிரப் பற்றும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மீதும் என் மீதும் பேரன்பும் கொண்டு செயலாற்றி வந்தவர் திரு. கு. பொன்னுசாமி அவர்கள். அவர் நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகத் துணைச் செயலாளராகப் பணியாற்றி, கழகத்தை வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றினார். மேலும், பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக அயராது பாடுபட்ட ஒரு தலைவராகவும் திகழ்ந்தார்.
அவரது மறைவிற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பிரிவால் வாடும் சேந்தமங்கலம் தொகுதி மக்கள், அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், பொதுவாழ்வில் அவருக்குத் துணை நின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த உடன்பிறப்புகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்."
இவ்வாறு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். திரு. கு. பொன்னுசாமி அவர்களின் மறைவுக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
மக்களே உஷார்....! 'மோந்தா' புயல்..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
விளம்பர ஜாம்பவான் பியூஷ் பாண்டே காலமானார்...!
15 பேர் பலி..! 20க்கும் மேற்பட்டோர் காயம்..! குடியரசுத் தலைவர் இரங்கல்...!
கோரவிபத்து...! ஆம்னி பேருந்தில் பயங்கர தீவிபத்து..! 15 பேர் பலி..! 20க்கும் மேற்பட்டோர் காயம்..!
பசுமை பழனிக்காக மலைப்பகுதியில் அதிகாரிகள் செய்த செயல்...! மக்கள் வரவேற்பு....!