by Vignesh Perumal on | 2025-10-22 12:38 PM
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (அக்டோபர் 22, 2025) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக, மாநிலத்தின் வடக்கு, மத்திய மற்றும் தென் மாவட்டங்கள் உட்பட மொத்தம் 12 மாவட்டங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, பின்வரும் 12 மாவட்டங்களில் இன்று கனமழை அல்லது பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி
இந்த மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் மலைப்பகுதிக்குச் செல்லத் திட்டமிடுபவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பகுதி வாரியாகப் பெய்யும் மழையின் தீவிரம் குறித்து அவ்வப்போது வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகளைப் பொதுமக்கள் தொடர்ந்து கவனிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்