| | | | | | | | | | | | | | | | | | |
தேசிய செய்திகள் india

வரலாற்றுச் சிறப்புமிக்க தரிசனம்..! ஜனாதிபதி 18ஆம் படி ஏறி சாமி தரிசனம்..!

by Vignesh Perumal on | 2025-10-22 12:26 PM

Share:


வரலாற்றுச் சிறப்புமிக்க தரிசனம்..!  ஜனாதிபதி 18ஆம் படி ஏறி சாமி தரிசனம்..!

இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், நான்கு நாள் உத்தியோகபூர்வ சுற்றுப்பயணமாக நேற்று (அக்டோபர் 21, 2025) கேரளா வந்தடைந்தார். திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த அவரை மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர். விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக ஆளுநர் மாளிகைக்குச் சென்ற ஜனாதிபதி, இரவில் அங்கு ஓய்வெடுத்தார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று (அக்டோபர் 22, 2025) சாமி தரிசனம் செய்வதற்காக அவர் காலை புறப்பட்டார். முதலில் திட்டமிட்டபடி, அவரது ஹெலிகாப்டர் நிலக்கல் ஹெலிகாப்டர் தளத்தில் தரையிறங்க இருந்தது. எனினும், பாதகமான வானிலை நிலவிய காரணத்தினால், ஹெலிகாப்டர் தரையிறங்கும் திட்டம் கடைசி நிமிடத்தில் மாற்றப்பட்டது.

இதையடுத்து, பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரமாடம் என்ற இடத்தில் அவசரமாகத் தயார் செய்யப்பட்ட தற்காலிக ஹெலிகாப்டர் தளத்தில், ஜனாதிபதி திரௌபதி முர்முவின் ஹெலிகாப்டர் தரையிறக்கம் செய்யப்பட்டது.

பிரமாடத்தில் தரையிறங்கிய ஜனாதிபதி திரௌபதி முர்மு, அங்கிருந்து சாலை மார்க்கமாகப் பம்பை கணபதி கோயிலுக்குக் கார் மூலம் சென்றார்.

பம்பையில் உள்ள கணபதி கோயிலில் பாரம்பரிய முறைப்படி இருமுடி கட்டு சடங்குகளை நிறைவேற்றினார்.

அதன் பின்னர், சபரிமலை சன்னிதானத்தை அடைவதற்காகச் சிறப்பு வாகனம் (Gurkha ரக வாகனம்) மூலம் பம்பை மலையேற்றப் பாதையில் புறப்பட்டுச் சென்றார்.

மலையேற்றத்தின் பின்னர், ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள், புனிதமான 18ஆம் படிகள் வழியாக ஏறிச் சென்று, சபரிமலை ஐயப்பன் மூலவரை தரிசனம் செய்தார். ஜனாதிபதி வருகை காரணமாக, சபரிமலை கோயில் வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களின் இந்தச் சபரிமலை தரிசனம், ஒரு முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. தரிசனம் மற்றும் பிரத்யேக வழிபாடுகளை நிறைவு செய்த பின்னர், ஜனாதிபதி அவர்கள் இன்று பிற்பகலில் திருவனந்தபுரம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி அவர்களின் நான்கு நாள் கேரள சுற்றுப்பயணம் அக்டோபர் 24ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த நாட்களில், அவர் பல்வேறு அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment