| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

வைகை அணையில் இருந்து வரத்து நீர் முழுமையாக வெளியேற்றம்...!!!

by admin on | 2025-10-20 08:01 PM

Share:


வைகை அணையில் இருந்து வரத்து நீர் முழுமையாக வெளியேற்றம்...!!!



நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழையால்

வைகை அணைக்கான நீர்வரத்து மீண்டும் அதிகரித்து நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததை அடுத்து மூன்றாவது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அணைக்கு வரும் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது5 மாவட்ட மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்ட தேனி மாவட்டம் முழுவதும்  பரவலாக பெய்து வருகிறது. கடந்த 4 நாட்களாக கொட்டி தீர்த்து வரும் கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில் அணை நீர்மட்டம் கிடுகிடு என உயரத் தொடங்கியது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் கடந்த 18 ஆம் தேதி   66 அடி எட்டிய போது, 5 மாவட்ட மக்களுக்கு முதல் வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு முதல் மீண்டும் பலத்த மழை பெய்யத் தொடங்கியதால் இன்று அதிகாலை வைகை அணைக்கான நீர்வரத்து மேலும் அதிகரித்தது. இதையடுத்து இன்று அதிகாலை அணையின் நீர்மட்டம் 68.50 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து கரையோர மக்களுக்கு 2 கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனை மக்களுக்கு அறிவிக்கும் வகையில் அணையின் மதகுப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சங்கு மூன்று முறை ஒலிக்க விடப்பட்டது 

அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணை 69 அடியை எட்டியதுதீபாவளி நாளான இன்று வைகை அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது.கரையோர மக்களை பாதுகாப்பாக வைக்கும் படி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகங்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில்  எச்சரிக்கை வாடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது அணை நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததால் மூன்றாம்  வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் மதுரை தேனி திண்டுக்கல் சிவகங்கை இராமநாதபுரம் ஆகிய ஐந்து தென் மாவட்ட வைகை ஆற்று கரையோர மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது ஆற்றில் இறங்கவோ  குளிக்கவோ  கடக்கவோ  முயற்சிக்க வேண்டாம் என்றும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும்  பொதுப்பணித்துறையினர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது

அணைக்கு நீர்வரத்து 5,793 கனஅடியாக உள்ளதுஅணையில் இருந்து வினாடிக்கு பாசனத்திற்காக ஏற்கனவே  சென்று கொண்டிருந்த 1350 கன அடி தண்ணீர் உடன் சேர்த்து தற்போது ஆயிரம் கனஅடி  தண்ணீர்  திறக்கப்பட்டுள்ளது  மொத்தமாக 2350  கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதுஅந்த நீர் அப்படியே ஆற்றில் வெளியேற்றப்படுகிறது

T.muthu Kamachi evidence editor 9842337244

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment