| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

வாக்குத் தவறும் வனத்துறை - யானையை அடிமைப்படுத்தவா..? சமூக வலைதளங்களில் "ஹாஷ் டேக்குடன் " இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு ;

by satheesh on | 2025-10-20 07:51 PM

Share:


வாக்குத் தவறும் வனத்துறை  - யானையை அடிமைப்படுத்தவா..? சமூக வலைதளங்களில்  "ஹாஷ் டேக்குடன் " இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு ;

*கோவையில் பிடிக்கப்பட்ட “ரோலக்ஸ்” யானை – வாக்கை தவறும் தமிழகவனத்துறை?*

*கோயம்புத்தூர்:*

*தொண்டாமுத்தூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடந்த பல மாதங்களாக  மக்கள் வாழ்வை* *அச்சுறுத்தி வந்த காட்டு யானை* *ரோலக்ஸ்”*

*இன்று* *வனத்துறையினர் பல மணிநேர முயற்சிக்குப் பிறகு பிடிக்கப்பட்டது.*

*பிடிப்புக்குப் பிறகு, வனத்துறை அறிவித்ததாவது – யானைக்கு மருத்துவ சோதனைகள் செய்யப்பட்டு அதன் நிலைமை மதிப்பீடு செய்யப்படும் எனவும், பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்.*

*ஆனால் இப்போது “யானையை அடர்ந்த வனப்பகுதியில் விடுவது என்பதே முதலில் கூறப்பட்ட வாக்குறுதி; ஆனால் தற்போது அதை ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குக் கொண்டு செல்வது ஏன்?” என்ற கேள்வி இயற்கை ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.*

*இவர்கள் சமூக வலைதளங்களில் வாக்கை_தவறும்_தமிழகவனத்துறை மற்றும் யானையை_அடிமைப்படுத்துவா என்ற ஹாஷ்டேக்குகளுடன் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.*

*இயற்கை ஆர்வலர்கள் கூறுவது:*

*வனத்துறை விவசாயிகளுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றியுள்ளது — ஆனால் யானைக்கு கொடுத்த வாக்கை இன்னும் நிறைவேற்றவில்லை. யானையை பிடித்துப் பாதுகாப்பாக வனப்பகுதியில் விடுவோம் என்ற ஆடர் இருந்தும், அதை ஆனைமலை காப்பகத்துக்குக் கொண்டு செல்வது தவறான முடிவு.”*

*அவர்களது வாதம் — “அனுபவமிக்க யானையை கட்டிப்பிடித்து முகாமில் அடைத்தால் அது மன உளைச்சல் அடையும், இயற்கை வாழ்விடத்திலிருந்து பிரியப்படும், இதுவே மனித-விலங்கு மோதலை குறைக்காமல் மேலும் பெருக்கும்” என்பதாகும்.

சில நாட்களுக்கு முன்பு கம்பம் பகுதியில் பிடிக்கப்பட்ட சுள்ளி கொம்பன் என்ற யானைபிடிக்கப்பட்டுதிருநெல்வேலி வனப்பகுதியில் விடப்பட்டது. இப்போது அதன் நிலை என்ன என்று தெரியாது? 

*இதற்கிடையில், வனத்துறை அதிகாரிகள் ரோலக்ஸ் யானை தற்போது மருத்துவ பரிசோதனைக்காக வன முகாமில் இருப்பதாகவும், அதன் உடல்நிலை மதிப்பீட்டுக்குப் பிறகே அடுத்த முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.*

*ஆனால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துவது — “ரோலக்ஸ்” யானை மீண்டும் அதன் இயற்கை வாழ்விடத்துக்கே அனுப்பப்பட வேண்டும்; யானையை ‘அடிமைப்படுத்தும்’ முயற்சிகளை அரசு தவிர்க்க வேண்டும் என்பதாகும்.*

செய்தியாளர் ; N. சதீஷ்குமார், பெரியகுளம், தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment