by admin on | 2025-10-16 10:02 AM
விராரணை என்ற பெயரில் பத்திரிகையளரை அழைத்து அடித்து உதைத்து புகாரை வாப்பஸ் வாங்க செய்த புதுக்கோட்டை திருமயம் காவல் உதவி ஆய்வளர் சரவணன் அடாவடி அட்டுழியம் ...?
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சார் பதிவாளர் ஸ்ரீகாந்த் என்பவர் மீது ரிப்போர்டர் விஷன் என்ற பத்திரிகையில் செய்தி வெளிவந்த நிலையில் சார் பதிவாளர் ஸ்ரீகாந்த் பத்திரிக்கையாளர் பழனியப்பன் மீது வன்மம் கொண்டு இருந்துள்ளர் இன் நிலையில் 24.9.25ம் தேதி திருமயம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்திற்கு செய்தி சேகரிக்க சென்ற நிருபரை திருமயம் சார்பதிவாளர் அலுவலகத்திற்க்கு அடையாளம் தெரியாத நபர் மூலமாக நிருபர் பழனியப்பனை பேச்சு வார்த்தைக்கு அழைத்து கடுமையாக தாக்கியுள்ளார். சார்பதிவாளர் ஸ்ரீகாந் உடனே நிருபர் பழனியப்பன் அருகில் உள்ள திருமயம் காவல் நிலையத்தில் சார் பதிவாளர் ஸ்ரீகாந்த் மீது புகார் அளித்துள்ளார். இந்நிலையில் 25. 9. 2025 ஆம் தேதி திருமயம் காவல் உதவி ஆய்வாளர் சரவணன் நிருபர் பழனியப்பனை விசாரணைக்கு அழைத்துள்ளார் காலை 10:30 மணிக்கு சென்ற பழனியப்பனை திருமயம் காவல் நிலையத்தில் தரையில் உட்கார வைத்து அவரது செல்போனை பரித்துக் கொண்டு கேட்ட வார்த்தைகளால் திட்டிய உதவி ஆய்வாளர் சரவணன் அடாவடி ஆட்டம் ஆடி இருக்கின்றார். பிறகு மதியம் வரை நிருபர் பழனியப்பன் வீட்டிற்கும் அவரது பத்திரிகை அலுவலகத்திற்க்கும். நீதிமன்றத்திற்க்கும் எவ்வித தகவல் தெரிவிக்காமல். தனது ஷூ காலால் உதைத்து அடித்து சித்திரவதை செய்து உள்ளார் .பின்பு மதியம் ஒரு மணிக்கு பிறகு திருமயம் சார்பதிவாளர் ஸ்ரீகாந்தை வர சொல்லி கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளார் உதவி ஆய்வாளர் சரவணன் ஸ்ரீகாந்த் மீது கொடுத்த புகாரை நீ வாபஸ் வாங்காவிட்டால் உன் மீது பல பொய் வழக்குகளை தொடுத்து உன்னை சிறையில் அடைத்து விடுவேன் என்று நிருபர் பழனியப்பனை மிரட்டி உள்ளார் ஒரு கட்டத்தில் பழனியப்பனிடம் அடாவடியாக கையெழுத்திடச் சொல்லி பழனியப்பன் கொடுத்த வழக்கை வழு கட்டாயம்மாக வாபஸ் பெரும் வகையில் கையப்பம் வாங்கிய திருமயம் உதவி ஆய்வாளர் சரவணன் இந்த புகாரில் இருந்து திருமயம் சார்பதிவாளர் ஸ்ரீகாந்தை விடுவிக்க ஒரு லட்ச ரூபாய் கையூட்டம் பெற்றதாக கூறப்படுகின்றது. இது ஒரு புறம் இருக்க இன் ஒரு வழக்கை சம்மந்த படுத்தி உதவி ஆய்வாளர் சரவணன் பின்பு நிருபர் மீது வேறொரு பிரச்சனையை காரணம் காட்டி அந்த பிரச்சனையை அவர் மீது பொய் வழக்கு போட்டு திருமயம் நீதியரசர் இடம் கொண்டு சென்று ஆஜர்படுத்தி உள்ளர் இரவு 8:30 மணிக்கு பின்பு நடந்ததை நிருபர் பழனியப்பனிடம் கேட்டறிந்த நீதி அரசர் உரியவிசாரணை செய்த பிறகு திருமயம் நீதி அரசர் தனது சொந்த ஜாமினில் நிருபர் பழனியப்பனை விடுவித்துள்ளார் அதன் பிறகு நிருபர் பழனியப்பன் புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 29.9. 25ம் தேதி காலையில் திருமயம் உதவி ஆய்வாளர் சரவணன் மீது உரிய விசரனை மேற்கொண்டுசட்டரீதியாகவும் துரை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார் இதனால் இந்த விசயம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
EDITOR MUTHUKAMATCHI 9842337244