| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

தீபாவளி..! பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு அறிவிப்பு...! நீதிமன்றம் உத்தரவு...!

by Vignesh Perumal on | 2025-10-14 08:08 PM

Share:


தீபாவளி..! பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு அறிவிப்பு...! நீதிமன்றம் உத்தரவு...!

உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையன்று தமிழ்நாட்டில் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, தமிழ்நாடு அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிப்பதற்கு நேரக் கட்டுப்பாட்டை விதித்து வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டும் தீபாவளித் திருநாளன்று பட்டாசுகள் வெடிக்க அரசு நிர்ணயம் செய்துள்ளது. அதாவது, காலை 6 மணி முதல் 7 மணி வரை,

இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஆகிய இரண்டு வேளைகளிலும் சேர்த்து, மொத்தம் இரண்டு மணி நேரம் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பசுமைப் பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அரசு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் உடல்நல பாதிப்புகள் குறித்து போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் மூலம் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பட்டாசு வெடிக்கும்போது பொதுமக்கள் பாதுகாப்பைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், விபத்து ஏதும் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவி அளிக்க சுகாதாரத் துறை பணியாளர்கள் தயாராக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியைக் கொண்டாடுமாறு தமிழக அரசு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் இந்த நேரக் கட்டுப்பாடும், பசுமைப் பட்டாசு குறித்த அறிவுறுத்தல்களும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








ஆசிரியர்கள் குழு.....

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment