by admin on | 2025-10-12 09:18 AM
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. R. ஸ்டாலின் IPS அவர்கள் அனைத்து அதிகாரிகள் மற்றும் காவலர்களுடன் நேரடியாக கலந்துரையாடும் மனம் திறந்து நிகழ்ச்சியின் இறுதி நாள்.
?கடைநிலை காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை தினமும் 18 பேர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியான *மனம் திறந்து* நிகழ்ச்சி 07.04.2025 அன்று ஆரம்பிக்கப்பட்டது.
? மாவட்டத்தில் உள்ள அனைத்து அதிகாரிகள் காவலர்கள் சுமார் 2000 பேருடன் நேரடியாக அமர்ந்து கலந்துரையாடி உள்ள நிகழ்ச்சியின் இறுதி நாள் நிகழ்ச்சியில் இன்று 11-10-25 ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்
? இந்தக் கலந்துரையாடலின் போது காவலர்கள் தாங்கள் பணியில் எதிர்கொள்ளும் சவால்கள், சாதனைகள், தனிப்பட்ட பிரச்சனைகள், காவல்துறையை மேம்படுத்த ஆலோசனைகள் போன்றவைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுடன் பகிர்ந்து கொள்வர்.
*மனம் திறந்து நிகழ்ச்சியில் மூலம் ஏற்பட்ட தீர்வுகள்*
?வார விடுமுறையை உறுதிப்படுத்த REST WEB PORTAL
?காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் தங்களின் கீழ் பணியாற்றும் ஆளினர்களை மரியாதையாக நடத்துதல்.
? சுழற்சி முறையில் பணி அமர்த்துதல்.
?கவுன்சிலிங் அடிப்படையில் பணி மாறுதல் வழங்குதல்
? சட்டம், சைபர் கிரைம் மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகள்
?தம்பதியினருக்கு ஒரே நாளில் வார விடுப்பு
?காவல் ஆளினர்களுக்கு வழங்கப்படும் அனைத்து பண படிகளும் உரிய நேரத்தில் கிடைப்பதற்கு ஆவண செய்தல்.
?குழந்தை பேறுக்காக சிகிச்சை பெற்று வரும் காவல் ஆளினர்களுக்கு இலகுவான பணி நியமித்தல்.
?சோதனைச் சாவடி பணிக்கு வீட்டில் இருந்து 20 கிலோமீட்டர் குறைவான தூரம்.
?தம்பதியினர் இருவரும் காவல் ஆளினர்களாக இருக்கும் பட்சத்தில் ஒருவரை மட்டும் வெளி மாவட்ட பாதுகாப்பு அலுவலுக்கு அனுப்புதல்.
?பிறமாவட்ட பாதுகாப்பு அலுவல்களுக்கு செல்லும் போது அந்தந்த உட்கோட்டத்திலிருந்தே தனி வாகனம்
?உடல் உள்ளுறுப்புகளை (viscera) ஆய்வக சோதனைக்கு உட்படுத்த உட்கோட்டத்தின் வாயிலாக தனி காவல் வாகனம் மூலம் எடுத்துச் செல்லுதல்.
?மலைப்பாங்கான பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் அங்கு பணிபுரியம் காவல் ஆளினர்கள் பணி நிமித்தமாக செல்லும் போது வன விலங்குகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளும் பொருட்டு நான்கு சக்கர வாகனங்கள் வழங்குதல்.
?சோதனைச் சாவடிகளில் காவல் ஆளினர்களுக்கு கழிப்பிடம், மின்விசிறி, இருக்கைகள் அமைத்து கொடுத்தல்.
?அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்களுக்கான கழிப்பிட வசதி, காத்திருப்பு அறை மற்றும் சுற்றுச்சுவர் கட்டுதல்.
?பிறந்தநாள் மட்டும் திருமண நாட்களில் காவல் ஆளினர்களுக்கு வான் தந்தி மற்றும் வாழ்த்து அட்டை மூலம் வாழ்த்து தெரிவித்தல்.
?விரிசுருள் (varicose) நோயால் பாதிக்கப்பட்டுள்ள காவல் ஆளினர்களுக்கு தனியாக ஆயுதப்படையில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது .
?பணி ஓய்வு பெறும் நிலையில் உள்ள 59 வயதை கடந்த காவல் ஆளினர்களுக்கு உயர்நீதிமன்ற அலுவலில்லிருந்து விலக்கு அளித்தல்.
?காவல் உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்விற்கு பயிற்சி மேற்கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு தினந்தோறும் இலவசமாக "வெற்றி பாதை" என்ற பெயரில் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து பயிற்சி அளித்தல்.
?கன்னியாகுமரி பகுதிக்கு அலுவல் நிமித்தமாக நியமிக்கப்படும் காவல் ஆளினர்கள் குறைந்த செலவில் தங்கும் பொருட்டு கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பாக நாளொன்றுக்கு ரூபாய் 120 செலவில் SSI வில்சன் நினைவு காவலர் தங்கும் விடுதி அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
?காவல்துறையில் பணியாற்றி பணி ஓய்வு பெறும் காவல் ஆளினர்களை ஓய்வுபெறும் தினத்தன்று மாவட்ட காவல் அலுவலகத்திற்கு குடும்பத்துடன் வரவழைத்து கௌரவித்து பாராட்டு சான்றிதழ் வழங்குதல்.
?மாவட்டம் முழுவதும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் காவல் ஆளினர்கள் நீண்ட நேரம் நிற்பதை கவனத்தில் கொண்டு அவர்கள் அமர்ந்து சிறிது ஓய்வெடுத்து பணியாற்றும் வகையில், இருக்கை வசதியுடன் கூடிய பேரிகார்டுகளை அமைத்துக்கொடுத்தல்
?அனைத்து காவல் நிலையங்களிலும் எப்போதும் மின் வசதி இருக்கும் வகையில் Inverter அமைத்துக் கொடுத்தல்.
?தடம்- Trail Of Talent என்ற தலைப்பில் ஆயுதப்படை மற்றும் உட்கோட்டங்களுக்கிடையேயான விளையாட்டு போட்டிகள்.
? மாவட்ட காவல் அலுவலகத்தில் கட்டப்பட்டு வரும் காவலர் உணவு அருந்தும் கட்டிடம்
இந்த மனம் திறந்து நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு காவலர் நல நடவடிக்கைகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எடுத்துள்ளார்கள். இறுதி நாள் நிகழ்ச்சியான இன்று காவலர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
T. Muthu Kamatchi evidence editor 984233744