by satheesh on | 2025-10-10 03:39 PM
திருநெல்வேலி ; பி.எஸ்.என் பொறியியல் கல்லூரியில் 15 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு எலி காய்ச்சல் உறுதியாகியுள்ளது.கல்லூரி நிர்வாகத்தில் சுகாதாரமற்ற குடிநீரை விநியோகம் செய்து அதன் காரணமாகவும் அதை பருகிய 15க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு எலி காய்ச்சல் உறுதியாகி உள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சுகாதாரத் துறையினர் கல்லூரிக்கு சீல் வைத்துள்ளனர். பஸ் நிலையம் மற்றும் ரோட்டோரங்களில் காணப்படும் ஹோட்டல் அல்ல இது. பொறியியல் கல்லூரியின் கேண்டீன். ஒவ்வொரு மாணவரிடமும் இலட்சக்கணக்கில் பணம் வசூலிக்கும் தனியார் பொறியியல் கல்லூரியான நெல்லை தருவை PSN பொறியியல் கல்லூரியின் மாணவ மாணவிகளுக்கு உணவு தயார் செய்யும் கேன்டீன் நிலைமை. இந்த அவல நிலையை கண்ட பிறகு பி.எஸ்.என் தனியார் பொறியியல் கல்லூரியில் கேண்டீன் FSSAI லைசென்ஸ் கேன்சல் செய்யப்பட்டு இருப்பதாக திருநெல்வேலி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.