by admin on | 2025-10-09 09:02 PM
இலக்கை நோக்கி அரசு மருத்துவர்கள்
வெல்வோம் விரைவில்
கேள்வி- பதில்: கேள்வி:
திமுக ஆட்சியில் கலைஞரின் அரசாணையை அமல்படுத்த அரசுக்கு உண்மையில் விருப்பம் இல்லையெனில் மற்ற மாநிலங்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துவதாக தெரிகிறதே?
பதில்:
1) ஆம். அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354 ன் படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வழங்க அரசை வலியுறுத்தி, நீண்டகாலமாக போராடி வருகிறோம். அதுவும் திமுக ஆட்சி அமைந்ததும் நிச்சயம் கோரிக்கை நிறைவேற்றப்படும் என திரு. மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்கள்.
2) ஆனால் இதுவரை நம் முதல்வர் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினோம்.
3) குறிப்பாக கலைஞரின் நினைவிடத்தில் கோரிக்கை மனு சமர்ப்பிக்கும் போராட்டம் நடத்தினோம். அப்போது கூட நம்மை கைது செய்தார்களே தவிர, கோரிக்கையை நிறைவேற்றவில்லை.
4) வேறுவழியின்றி, ஊதியக் கோரிக்கைக்காக உயிரையே கொடுத்த டாக்டர் LN நினைவிடத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டோம். அப்போது கூட அரசாங்கத்தின் மனசாட்சியை தட்டி எழுப்ப முடியவில்லை என்பது தான் வருத்தமளிக்கிறது.
5) கலைஞர் வழியில் ஆட்சி நடத்துவதாக தெரிவிக்கின்றனர். ஆனால் நான்கரை ஆண்டுகளாக கலைஞரின் அரசாணையை புறக்கணித்து வருகின்றனார்.
6) அதுவும் மகன் முதல்வராகவும், பேரன் துணை முதல்வராகவும் இருக்கும் போது கலைஞரின் அரசாணைக்கு தடை போடுவதை நாம் எதிர்பார்க்கவில்லை. அதற்கான உண்மையான காரணம் என்ன என்பதை இதுவரை துறை அமைச்சரும் தெரிவிக்கவில்லை.
7) இதற்கும் மேல் கலைஞரின் அரசாணையை அமல்படுத்த, அரசுக்கு உண்மையில் விருப்பம் இல்லையெனில், மற்ற மாநிலங்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க அரசை வேண்டுகிறோம். அல்லது மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டுகிறோம்.
8) ஆனால் இந்த ஆட்சி நிறைவடைய இருக்கும் நிலையில், மருத்துவர்களின் வேதனையை தீர்க்க முன்வரவில்லை என்றால் அது வரலாற்று பிழையாகவே அமையும். மேலும் இந்த அரசின் துரோகத்தை ஒட்டுமொத்த மருத்துவர்களும் மன்னிக்கவே மாட்டார்கள் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
9) எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், அரசு மருத்துவர்களுக்கு தன் தந்தையின் அரசாணையை உடனடியாக அமல்படுத்த வேண்டுகிறோம். மேலும் திவ்யா விவேகானந்தனுக்கு அரசு வேலைக்கான ஆணையை வழங்கவும் வேண்டுகிறோம்.அரசே! - டாக்டர் கலைஞரின் அரசாணையை உடனே நிறைவேற்றவும்.- வழங்கிடு! வழங்கிடு!- கொரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு அரசு வேலை வழங்கிடு!
மக்கள் நலனும், மருத்துவர் நலனும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்' வேண்டும்!
வேண்டும்!DACP Pay with Pay Band 4 @ 12 years of Service வேண்டும்!*
போராடுவோம்! வெற்றி பெறுவோம்!.
T. Muthu kamatchi evidence editor. 9842337244