by satheesh on | 2025-10-09 05:23 PM
திண்டுக்கல் ; பழநியைச் சேர்ந்த சொக்கநாதரின் மகள் காருண்யா ஸ்ரீதர்ஷினி (19) நீட் தேர்வில் 228 மதிப்பெண் பெற்றிருந்தும், 456 மதிப்பெண் பெற்றதாக போலி சான்றிதழ் தயாரித்து திண்டுக்கல் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து இருந்தது வெளிச்சத்துக்கு வந்தது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி சான்றிதழ் போலி என உறுதி செய்தனர். இதனால் மாணவி, தந்தை சொக்கநாதர், தாய் விஜய முருகேஸ்வரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல்லில் மருத்துவ படிப்புக்கு இணைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாணவிக்கு போலி சான்றிதழ் தயாரித்தவர் யார் - மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை.
இந்நிலையில் இணைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாணவிக்கு போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்தன் பின்னணியில் இருப்பவர்கள் யார், இதேபோல் வேறு யாருக்கும் போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்துள்ளனரா என என்பதை கண்டறிந்து அவர்களை கைது செய்யும் பணியில் மாவட்ட குற்ற பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
செய்தியாளர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.