by admin on | 2025-10-09 06:03 AM
கும்பகோணத்தில் சட்டவிரோத பெட்ரோல் விற்பனை.
தமிழகத்தில் அவ்வப்பொழுது நடக்கும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பெட்ரோல் விற்பனை செய்யும் பங்குகளுக்கு காவல்துறை அதிரடி அறிவிப்பு ஒன்றை வழங்கி உள்ளது, தமிழகம் முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு Empty பாட்டில் கேன்களில் பெட்ரோல் வழங்கக் கூடாது என 2022 ஆம் ஆண்டு தமிழக காவல்துறை இயக்குனரால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டதோடு காலி கேன்களில் பெட்ரோல் வழங்க பங்கு உரிமையாளர்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இதை தமிழகத்தில் அனைத்து மாவட்ட காவல்துறையும் விதிகளை பின்பற்றியும் பெட்ரோல் பங்குகளுக்கு குறிப்பானை வழங்கி உத்தரவு பிறப்பித்த நிலையில் சட்டத்திற்கு புறம்பாக இன்று 8-10-2025 அன்று பிற்பகல் 12:30 மணியளவில் கும்பகோணம் மொட்டை கோபுரம் எதிரே உள்ள இந்தியன் பெட்ரோல் பங்கில் பத்து லிட்டருக்கு மேல் பெரிய ரக கேன்களில் பெட்ரோல் விற்பனை செய்த நிகழ்வு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் அ, மகேஷ்