| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

திண்டுக்கல்லில் இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டம்...! பொதுமக்கள் அவதி....!

by Vignesh Perumal on | 2025-10-07 01:30 PM

Share:


திண்டுக்கல்லில் இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டம்...! பொதுமக்கள் அவதி....!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில், 25-அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நத்தம் தொடக்கக் கூட்டுறவு வங்கி அலுவலகம் முன்பு இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் தொடக்கக் கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள்.

அதனுடன் இணைந்த ரேஷன் கடை ஊழியர்கள் (நியாய விலை கடை பணியாளர்கள்).

தொடக்கக் கூட்டுறவு வங்கி மற்றும் ரேஷன் கடை ஊழியர்களின் முக்கியப் பிரச்சனைகளை மையப்படுத்தியே இந்தக் கோரிக்கைகள் உள்ளன.

பணியாளர்களுக்கு போதுமான ஊதியம் வழங்குவது மற்றும் பணியின் அடிப்படையில் ஊதியத்தை நிர்ணயம் செய்வது, பணிப்பதிவேட்டை முறையாகப் பராமரிப்பது. ரேஷன் கடைகளில் எடையாளர் ஒருவரை நியமிக்க வேண்டும். (அல்லது பணியாளரின் பணிச்சுமையைக் குறைக்க, அட்டைகளின் எண்ணிக்கையை 500 ஆகப் பிரித்து எளிதாக்க வேண்டும்). ஊழியர்களுக்கான ஊதியத்தை வங்கி மூலம் வழங்குவது. ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களைப் வழங்க வேண்டும். புளூடூத் மூலம் மின்னணு எடை தராசு இணைக்கப்பட்டு பொருட்கள் விநியோகிக்கப்படுவதால் ஏற்படும் காலதாமதம் மற்றும் சச்சரவுகளைத் தவிர்க்க வேண்டும் (அல்லது புளூடூத் முறையை நீக்க வேண்டும்).

ரேஷன் கடை ஊழியர்களுக்குப் பதவி உயர்வு வழங்குதல். கொரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய ரேஷன் கடை ஊழியர்களுக்கு இடை நிகழ்வு செலவினமாக ஒரு நாளைக்கு ரூ.200 வழங்க வேண்டும். ரேஷன் கடைகளுக்கு சரியான எடையில் தரமான பொருட்களை வழங்க வேண்டும்.

தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக,

நத்தம் பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் அதன் கீழ் செயல்படும் ரேஷன் கடைகள் மூடப்பட்டன. இதனால், ரேஷன் கடைகளில் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பெற முடியாமல் சிரமப்பட்டனர். மேலும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பயிர்க்கடன் மற்றும் நகைக்கடன் தொடர்பான வரவு செலவுகள் மேற்கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

இந்தப் போராட்டமானது, தமிழ்நாடு அரசு விரைந்து பேச்சுவார்த்தை நடத்தி தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



ஆசிரியர்கள் குழு.....

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment