| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

கூடுதல் வகுப்பறைகளை காணொளி மூலம் திறந்து வைத்த முதல்வர்..!! குத்துவிளக்கு ஏற்றிய கலெக்டர் ரஞ்சித் சிங்...!!!

by admin on | 2025-10-06 07:54 PM

Share:


கூடுதல் வகுப்பறைகளை காணொளி மூலம் திறந்து வைத்த முதல்வர்..!! குத்துவிளக்கு ஏற்றிய கலெக்டர் ரஞ்சித் சிங்...!!!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (06.10.2025)  சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், தேனி மாவட்டம், அம்மச்சியாபுரம் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில்    ரூ.49 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள  கூடுதல் வகுப்பறை கட்டடத்தினை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப.,  அவர்கள் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டடத்தினை குத்துவிளக்கேற்றி வைத்து  பார்வையிட்டார்கள். 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.   மேலும், அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகங்கள், குடிநீர் வசதி, கழிவறைகள், மின்சாதன வசதிகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும்  திறன் வகுப்பறைகள் (Smart Class) அமைத்தல் போன்ற  பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதனடிப்படையில் அம்மச்சியாபுரம் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.49 இலட்சம் மதிப்பீட்டில்  தரைத்தளம், முதல்தளம் என 2 கூடுதல் வகுப்பறைகள் சுகாதாரமான குடிநீர், மின்சாரம், அலமாரி வசதி, சாய்வுதள வசதி  மற்றும் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்கு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்வில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திருமதி சம்பூர்ணம், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


T. Muthukumathi evidence editor. 9842337244


WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment