by admin on | 2025-10-06 07:16 PM
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (06.10.2025) மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையின்படி, அரசியல் கட்சி மற்றும் அமைப்பினர்கள் நடத்தும் போராட்டங்கள் / ஆர்ப்பாட்டங்கள்/ பொதுக் கூட்டங்கள்/ உண்ணாவிரத போராட்டம்/ பேரணிகள்/ தெருமுனைப் பிரச்சாரங்கள் போன்றவற்றை நடத்துவதற்கு குறிப்பிட்ட இடத்தினை ("EARMARK") தேர்வு செய்வது தொடர்பான கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அரசியல் கட்சி மற்றும் அமைப்பினர்கள் நடத்தும் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள்/ பொதுக் கூட்டங்கள்/ உண்ணாவிரத போராட்டம்/ பேரணிகள்/தெருமுனைப் பிரச்சாரங்கள் போன்றவற்றை நடத்துவதற்கு காவல்துறை மூலம் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு நடைமுறையில் உள்ள இடங்களின் விபரங்கள் குறித்து அரசியல் கட்சி பிரமுகர்களிடம் தெரிவிக்கப்பட்டது. மேலும் புதிதாக சேர்க்கப்பட வேண்டிய இடங்களின் விபரங்கள் குறித்து அரசியல் கட்சி பிரமுகர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட இடங்கள் தவிர்த்து வேறு ஏதேனும் புதிய இடங்களில் நடத்த உத்தேசித்திருப்பின் அந்த இடத்தினையும் ("EARMARK") அவ்விடத்தினை தேர்வு செய்யப்பட்டமைக்கான காரணங்களையும் தெரிவித்து தங்கள் பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் 10.10.2025-க்குள் மனு அளிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் பெரியகுளம் சார் ஆட்சியர் திரு.ரஜத் பீடன், இ.ஆ.ப., கூடுதல் காவல் கண்கணிப்பாளர் திரு.கலைக்கதிரவன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.முத்துமாதவன், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் திரு.செய்யது முகமது, துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு.முத்துராஜ், திரு.தேவராஜ், திரு.நல்லு, திரு.முத்துக்குமார், திரு.வெங்கடேசன் மற்றும் வட்டாட்சியர்கள், அரசியல்கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
T. Muthu Kamakshi evidence editor. 9842337244