by admin on | 2025-10-06 01:37 PM
அண்ணாநகர் மக்கள் பட்டா கோரி மனுநீதி நாளில் மனு
விருதுநகர் மாவட்டம் ரோசல் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதி மக்கள் இலவச மனைக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மனுநீதி நாளில் மனு அளித்தனர்.சுமார் 70 குடும்பங்கள் ஒருங்கிணைந்து மனு அளித்துள்ளன. “பலமுறை PTO அலுவலகத்திலும் மனு கொடுத்தோம். கிராம சபை கூட்டத்திலும் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றினோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று அவர்கள் தெரிவித்தனர்.பல ஆண்டுகளாக அப்பகுதியில் வசித்து வரும் மக்கள், அரசு உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்..
செய்தியாளர் முனிராஜ்.