by admin on | 2025-10-06 01:05 PM
பெற்ற மகன் துரத்தியதால் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த வயோதிப தாய்!.
இராஜபாளையம் RR நகர் பகுதியில் வசிக்கும் 64 வயதான லட்சுமி என்ற வயோதிப பெண், தன்னை வீட்டிலிருந்து துரத்தி விட்ட மகனுக்கு எதிராக நியாயம் கோரி, இன்று நடைபெற்ற மனுநீதி நாள் நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.லட்சுமி அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:“என் கணவர் வெள்ளைச்சாமியுடன் சேர்ந்து நாங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தில் வாங்கிய வீடு — மில் கிருஷ்ணாபுரம் கிராமம், அய்யனார் கோயில் தெருவில் உள்ளது. நாங்கள் மூன்று பெண் பிள்ளைகளுக்கும் மகனுக்கும் திருமணம் செய்து வைத்தோம்.மகன் ராஜ்குமார் ‘நான் தான் உங்களை கடைசி காலத்தில் பார்த்துக் கொள்கிறேன், ஆகையால் இந்த வீடு எனக்கு எழுதிக் கொடுங்கள்’ என்று வாக்குறுதி அளித்தான். நம்பிய நாங்கள் 2017ஆம் ஆண்டு தானச் செட்டில்மெண்ட் ஆவண எண் 1386/2017 மூலம் அந்த வீட்டை மகனுக்குக் கொடுத்தோம்.ஆனால் என் கணவர் இறந்ததும், மகன் கொடுத்த வாக்குறுதியை மீறி, என்னை வீட்டிலிருந்து துரத்திவிட்டான். இப்போது நான் வயதான பெண்ணாக வீதியில் தவிக்கிறேன்,” என மனுவில் துயரத்துடன் குறிப்பிட்டுள்ளார்.இந்த மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிசீலனை செய்து தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது.மகன்துரத்தி விட்டதால், தன் கணவர் பெயரில் இருந்த வீட்டு உரிமையை மீட்டளிக்க வேண்டி,இராஜபாளையத்தைச் சேர்ந்த 64 வயதான லட்சுமி இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.மகன் அளித்த வாக்குறுதியை நம்பி வீடு எழுதிக் கொடுத்ததின் விளைவாக,இன்று வீட்டில்லாமல் தவிக்கும் அந்த தாயின் மன நிலை,மனுநீதி நாளில் பலரையும் உருக்கியது.
செய்தியாளர் முனிராஜ்.