by admin on | 2025-10-06 09:36 AM
*கும்பகோணம் வள்ளலார் லயன்ஸ் சங்கம் மாவட்ட வள்ளலார் தின விழாவில் நல்லாசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது,*
கும்பகோணம் அருகே கீழக்கொட்டையூரில் வள்ளலார் பிறந்த தினமான அக்டோபர் 5, தேதி அன்று பண்பாட்டு லயன்ஸ் சங்கங்கள் நடத்திய மாவட்ட வள்ளலார் தின விழா மற்றும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி வள்ளலார் மாணவர் இல்லம் அண்ணா அரங்கில் நடைபெற்றது, இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் MJF. Lion எஸ், ரவி தலைமை வகித்தார், கும்பகோணம் வள்ளலார் லயன்ஸ் சங்கம் தலைவர் ஏ,என் சரவணன் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார், மாவட்ட ஆளுநர் lion டி, மணிவண்ணன் விழாவினை குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார், அதனைத் தொடர்ந்து அனைவரும் எழுந்து நின்று சிறிது நேரம் இறை வணக்கம் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாடினர்,
அதன் பின்பு லயன்ஸ் வழிபாடு செய்து உலக அமைதிக்காக ஒரு நிமிடம் மௌனத்தை கடைபிடித்தனர், சுமார் இரண்டு மணி நேரம் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில் மாணவர்களின் நல வளர்ச்சிக்காக ஆசிரியர்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டு வருவதை பாராட்டி சுமார் 35க்கும் மேற்பட்ட ஆசிரியைகளுக்கு கல்வி வள்ளல் விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தனர், அதனைத் தொடர்ந்து லயன்ஸ் சங்கமாவட்ட ஆளுநர் மற்றும் ஆண்டு அலுவலர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரை வழங்கினர்,தொடர்ந்து நிகழ்ச்சியில் வள்ளலார் கல்வி அறநிலையங்களின் தாளாளர் எஸ்,தயாளன், செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட அவைச்செயலாளர் ரத்னகுமார், மாவட்ட அமைப்பாளர் ஜனார்த்தனன், மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மண்டல தலைவர் ரமேஷ், மாவட்ட நிர்வாக அலுவலர் சசிதரன், வட்டாரத் தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் நிகழ்ச்சியின் முடிவில் lion பி, மருதையன் அனைவருக்கும் நன்றி உரை வழங்கினார், விழாவில் பங்கேற்ற அனைவரும் இணைந்து வள்ளலார் மாணவர் இல்லத்தில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சங்கத்தினர் சார்பில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது,
செய்தியாளர் அ, மகேஷ்