by Vignesh Perumal on | 2025-10-04 10:23 AM
எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ளாவிட்டால், உலக வரைபடத்திலேயே பாகிஸ்தான் என்ற நாடு இருக்காது என்று இந்திய ராணுவத் தலைமை தளபதி உபேந்திர திவேதி (Upendra Dwivedi) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தானின் தொடர்ச்சியான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராகத் தலைமை தளபதி உபேந்திர திவேதி இன்று (அக்டோபர் 4, 2025) வெளியிட்ட குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும். அவ்வாறு பயங்கரவாதச் செயல்களை நிறுத்தத் தவறினால், உலக வரைபடத்தில் பாகிஸ்தான் என்ற ஒரு நாடு இருப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விடும்."
கடந்த காலத்தில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்துர்' (Operation Sindhur) போன்ற நடவடிக்கைகளின்போது காட்டிய நிதானத்தை இனி எந்தச் சூழ்நிலையிலும் இந்தியா காட்டாது. பயங்கரவாதத்தை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க இந்திய ராணுவம் தயங்காது.
இந்திய ராணுவத் தலைமை தளபதியின் இந்தக் கடுமையான எச்சரிக்கை, பயங்கரவாதத்தின் மீதான இந்தியாவின் நிலைப்பாடு மேலும் தீவிரமடைந்துள்ளதைக் குறிக்கிறது.
ஆசிரியர்கள் குழு.....