by Vignesh Perumal on | 2025-10-03 03:20 PM
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக மத்திய பா.ஜ.க. அரசு விசாரணைக்குழுவை அனுப்பியதற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வெள்ள பாதிப்பின்போது தமிழகம் வராத மத்திய நிதியமைச்சர், இப்போது கரூர் வந்தது ஏன் என்றும், தமிழகத்தின் மீது பா.ஜ.க. வன்மத்துடன் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பா.ஜ.க. அரசு கரூர் சம்பவத்தில் காட்டும் அக்கறைக்குக் கடும் விமர்சனம் வைத்துள்ளார்:
"மணிப்பூர் கலவரம், குஜராத் மாநிலங்களில் நடந்த துயரச் சம்பவங்கள், கும்பமேளாவில் நடந்த விபத்துக்கள் போன்ற விவகாரங்களுக்கு மத்திய அரசு விசாரணைக்குழுவை அனுப்பாதது ஏன்? ஆனால், இப்போது கரூருக்கு மட்டும் விசாரணைக்குழுவை பா.ஜ.க. அனுப்பியது ஏன்?" என்று அவர் கேள்வி எழுப்பினார். இந்தச் செயல், மத்திய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டின் மேல் வன்மத்தோடு செயல்படுவதைக் காட்டுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
"தமிழகத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவில்லை. ஆனால், தற்போது கரூர் வந்துள்ளதன் நோக்கம் என்ன?" என்று வினவினார்.
அடுத்த ஆண்டு வரவுள்ள தேர்தலைக் கருத்தில் கொண்டு, இந்தச் சம்பவத்தின் மூலம் ஆதாயம் தேட மத்திய பா.ஜ.க. அரசு முயல்கிறது என்றும் அவர் கடுமையாகச் சாடினார்.
ஆசிரியர்கள் குழு.....