by admin on | 2025-10-03 01:03 PM
நத்தம் அருகே 2 பவுன் செயின், ரூ.10 ஆயிரம் பணம் வழிப்பறி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பரளி - தேத்தாம்பட்டியை சேர்ந்த காய்கறி வியாபாரி ராஜாங்கம்(31) இவர் கடந்த ஜூலை மாதம் 17- ம் தேதி பைக்கில் வத்திபட்டிக்கு சென்ற போது பேட்டைக்குளம் பகுதியில் 3 பேர் வழி மறித்து அவரிடம் 2 பவுன் செயின் மற்றும் ரூ10 ஆயிரம் பணத்தை பறித்து சென்றனர். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து லிங்கவாடியை சேர்ந்த மாதேஷ்(20) என்பவர் ஏற்கனவே நத்தம் போலீசார் கைது சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய பரளிபுதூரை சேர்ந்த சுப்பையா மகன் வீரணன்(எ)தவம் (21 ) என்பவரை நத்தம் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை நத்தம் போலீசார் தேடி வருகின்றனர்
செய்தியாளர் மோகன் கணேஷ் திண்டுக்கல்.