by Muthukamatchi on | 2025-03-10 07:23 PM
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதான் ஐ- கண்டித்து பெரியகுளத்தில் உருவபொம்மை எரிப்புநாடாளு மன்றத்தில் தமிழக எம்பிக்களையும் . தமிழக மக்களையும் மரியாதை குறைவாக பேசிய பாஜக ஒன்றிய கல்விஅமைச்சரை கண்டித்து திமுக பெரியகுளம் நகர செயலாளர் கே. முகமது இலியாஸ் அவர்களின் தலைமையில் உருவபொம்மையை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுஇந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக நகர் கழக அவைத் தலைவர் வெங்கடாசலம் . நகர் கழக துணைச் செயலாளர்கள் சரவணன். சேதுராமன். நகர பொருளாளர் சுந்தரபாண்டியன் மற்றும் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர்கார்த்திக். அயலக அணி துணை அமைப்பாளர் பாசித்ரகுமான். நாகலிங்கம்-வார்டு செயலாளர்கள் முத்துப்பாண்டி- விஸ்வநாதன் .பாலு- கரிகாலன் - வக்கில் குணா உள்ளிட்டவார்டு செயலாளர்கள் சார்பு அணி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டு தமிழக எம்பிகளை மரியாதை குறைவாக பேசிய ஒன்றிய அமைச்சரை கண்டித்து கோஷங்கள் எழுப்பி அவருடைய உருவப் பொம்மையை எரித்தனர்