by aadhavan on | 2025-09-07 06:20 PM
மதுரை அட்வர்டைசிங் பிசினஸ் கிளப் கூட்டத்தில், தொழில் கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரை தல்லாகுளம் யூனியன் கிளப்பில் சங்கத்தின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. தலைவர் டி.சண்முகம் தலைமை, செயலாளர் மா.கிறிஸ்டோபர் ஞானராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், நடந்து முடிந்த இரண்டாவது பதவியேற்பு விழாவிற்காக உழைத்த மூத்த உறுப்பினர் கே.ஆர்.ராமதாஸ், ஜெய்கணேஷ், நம்புகுமார், வரதராஜன், அருண், மு.ஆதவன் உள்ளிட்ட சங்க உறுப்பினர்களுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டன. புதிய உறுப்பினர்களும் சங்கத்தில் இணைந்து கொண்டனர்.
கூட்டத்தில் சங்கத்தின் வளர்ச்சி மற்றும் உறுப்பினர்களின் தொழில் பெருக கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பொருளாளர் செல்வகுமார் நன்றி கூறினார்.