| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் அரசியல்

வரலாற்று புரட்சி...! மன்னிப்பு கேட்க வேண்டும்...! முன்னாள் முதல்வர் ஆவேசம்...!

by Vignesh Perumal on | 2025-07-31 11:12 AM

Share:


வரலாற்று புரட்சி...! மன்னிப்பு கேட்க வேண்டும்...! முன்னாள் முதல்வர் ஆவேசம்...!

1998 ஆம் ஆண்டில் பாஜக கூட்டணியை ஜெயலலிதா முறித்தது "வரலாற்றுப் பிழை" என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்த கருத்துக்கு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா செய்தது வரலாற்றுப் பிழை அல்ல என்றும், அது ஒரு "வரலாற்றுப் புரட்சி" என்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆவேசமாகப் பதிலளித்துள்ளார்.

கடம்பூர் ராஜூ சமீபத்தில் பேசுகையில், 1998 இல் ஜெயலலிதா பாஜக ஆட்சியை கவிழ்த்தது வரலாற்றுப் பிழை என்றும், அதன் காரணமாகவே திமுக 14 ஆண்டுகள் ஆட்சியில் நீடித்தது என்றும் கூறியிருந்தார். இந்த கருத்துக்கு அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஓ.பன்னீர்செல்வம் இன்று கடும் பதிலடி கொடுத்துள்ளார்.

"ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டு, அரசியலில் உயர்ந்த நிலையை அடைந்த கடம்பூர் ராஜூ, அவரையே விமர்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஜெயலலிதா செய்தது வரலாற்றுப் பிழை அல்ல. அது ஒரு வரலாற்றுப் புரட்சி" என்று ஓ.பன்னீர்செல்வம் ஆணித்தரமாகக் கூறினார்.

மேலும், "ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பது மிகப் பெரிய துரோகம். அந்தத் துரோகத்தை கடம்பூர் ராஜூ செய்துள்ளார். ஜெயலலிதாவின் அரசியல் முடிவுகளை விமர்சிக்கும் எந்தத் தார்மீக உரிமையும் அவருக்குக் கிடையாது" என்றும் ஓ.பன்னீர்செல்வம் காட்டமாகக் குறிப்பிட்டார்.


கடம்பூர் ராஜூ தனது கருத்துக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அ.தி.மு.க தொண்டர்கள் இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் ஓ.பன்னீர்செல்வம் எச்சரித்தார்.

ஜெயலலிதாவின் கடந்தகால அரசியல் முடிவுகள் குறித்து அ.தி.மு.க.வுக்குள் வெடித்துள்ள இந்த விவாதம், கட்சியின் தற்போதைய தலைமைப் பிரச்சனைகளை மேலும் தீவிரப்படுத்துவதாக அமைந்துள்ளது.







நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment