| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்....! நீதிமன்றப் புறக்கணிப்பு...!

by Vignesh Perumal on | 2025-07-30 11:33 AM

Share:


வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்....! நீதிமன்றப் புறக்கணிப்பு...!

தாராபுரத்தில் வழக்கறிஞர் முருகானந்தம் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், தாம்பரத்தில் வழக்கறிஞர் ரகுராமன் மீது நடைபெற்ற கொலைவெறித் தாக்குதலைக் கண்டித்தும், வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் இன்று திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சமீப காலமாகத் தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தாராபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் முருகானந்தம் படுகொலை செய்யப்பட்ட சம்பவமும், தாம்பரம் வழக்கறிஞர் ரகுராமன் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலும் வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் உயிருக்கும், தொழிலுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையை உணர்ந்த வழக்கறிஞர்கள், நாடு தழுவிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் இன்று நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டது. வழக்கறிஞர்கள் எவரும் நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை. தொடர்ந்து, திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயில் முன்பாகப் பெரிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கத் தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார்.

சங்கச் செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது, 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்று, "வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்!", "வழக்கறிஞர்களின் உயிருக்கு உத்தரவாதம் வேண்டும்!" போன்ற கோஷங்களை எழுப்பினர்.

வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், தங்கள் தொழில் சார்ந்த பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். 





செய்தி-மோகன் கணேஷ் திண்டுக்கல்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment