| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

11 கிலோ கஞ்சா பறிமுதல்...! போலீசார் தீவிர விசாரணை...!

by Vignesh Perumal on | 2025-07-29 03:55 PM

Share:


11 கிலோ கஞ்சா பறிமுதல்...! போலீசார் தீவிர விசாரணை...!

கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற விரைவு ரயிலில், திண்டுக்கல் ரயில் நிலையம் வந்தபோது, 11 கிலோ கஞ்சா கேட்பாரற்று கிடந்த பையில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று (திங்கட்கிழமை) கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல் ரயில் நிலையம் வந்தடைந்தது. அப்போது, திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையில், சிறப்பு சார்பு ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் காவலர்கள் ரயிலில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

சோதனையின் போது, முன்பதிவில்லா பெட்டி ஒன்றில் கேட்பாரற்று கிடந்த ஒரு பையைச் சோதனை செய்தனர். அந்தப் பையைத் திறந்து பார்த்தபோது, அதில் சுமார் 11 கிலோ கஞ்சா இருப்பதைக் கண்டுபிடித்து அதிர்ச்சியடைந்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 11 கிலோ கஞ்சாவை, ரயில்வே காவல் நிலைய போலீசார் திண்டுக்கல் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கஞ்சாவைக் கடத்தி வந்தது யார், எங்கிருந்து இந்தக் கஞ்சா கடத்தப்படுகிறது, எங்கு கொண்டு செல்லப்பட இருந்தது, இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள கடத்தல் கும்பல் யார் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயில்வே போலீசார் கடத்தலை முறியடித்த இச்சம்பவம் திண்டுக்கல் ரயில்வே நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.










செய்தி-மோகன் கணேஷ் திண்டுக்கல்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment