| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

ஆனவக்கொலை வழக்கு...! எஸ்.ஐ. தம்பதி சஸ்பெண்ட்...! டிஐஜி அதிரடி உத்தரவு..!

by Vignesh Perumal on | 2025-07-29 02:45 PM

Share:


ஆனவக்கொலை வழக்கு...! எஸ்.ஐ. தம்பதி சஸ்பெண்ட்...! டிஐஜி அதிரடி உத்தரவு..!

திருநெல்வேலியில் நடந்த இளைஞர் கவின் ஆனவக்கொலை வழக்கில், காவல் உதவி ஆய்வாளர்களான சரவணன் மற்றும் அவரது மனைவி கிருஷ்ணவேணி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு சிறப்பு காவல் படை டிஐஜி விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார். சுர்ஜித் என்ற இளைஞரின் பெற்றோர்களான இந்த தம்பதியினரின் தூண்டுதலால்தான் கவின் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் புகார் இந்த நடவடிக்கைக்குக் காரணமாகும்.

நெல்லை மாவட்டத்தில் இளைஞர் கவின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இது ஒரு ஆனவக்கொலை எனப் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தக் கொலையின் பின்னணியில், சுர்ஜித் என்ற மற்றொரு இளைஞரின் பெற்றோர்களான காவல் உதவி ஆய்வாளர் தம்பதி சரவணன் மற்றும் கிருஷ்ணவேணி ஆகியோர் செயல்பட்டதாகப் புகார் எழுந்தது. இவர்களது தூண்டுதலால்தான் கவின் கொலை செய்யப்பட்டதாகச் சுர்ஜித்தின் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. 

கவின் ஆனவக்கொலை வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் தம்பதி மீது புகார் எழுந்ததையடுத்து, தமிழ்நாடு சிறப்பு காவல் படை டிஐஜி விஜயலட்சுமி இந்த விவகாரத்தைக் கையில் எடுத்தார். புகாரின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டார். முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், குற்றம்சாட்டப்பட்ட காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணன் மற்றும் கிருஷ்ணவேணி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து இன்று உத்தரவிட்டுள்ளார்.

காவல்துறையைச் சேர்ந்த இருவர் மீதும் கொலை வழக்கில் தூண்டுதல் குற்றச்சாட்டு எழுந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.










நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.


WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment