| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

சுற்றுச்சூழலுக்கு உகந்த சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்...! மக்களிடம் வரவேற்பு...!

by Vignesh Perumal on | 2025-07-27 03:13 PM

Share:


சுற்றுச்சூழலுக்கு உகந்த சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்...! மக்களிடம் வரவேற்பு...!

விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கி வரும் நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வக்கம்பட்டி அருகே விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், முற்றிலும் இயற்கை சார்ந்த மூலப்பொருட்களைக் கொண்டு சிலைகள் வடிவமைக்கப்படுகின்றன.

வக்கம்பட்டி பகுதியிலுள்ள சிற்பக் கலைஞர்கள், பலவித வடிவங்கள் மற்றும் அளவுகளில் விநாயகர் சிலைகளை வடிவமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சிறிய சிலைகள் முதல் பெரிய சிலைகள் வரை பல்வேறு அளவுகளில், கலை நயத்துடன் சிலைகளை உருவாக்கும் பணியில் நூற்றுக்கணக்கான கலைஞர்கள் இரவு பகலாக உழைத்து வருகின்றனர்.

இந்த ஆண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு சிலைகள் தயாரிக்கப்படுகின்றன.

சிலைகள் அனைத்தும் சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத களிமண், காகிதக் கூழ் (பேப்பர் பப்) மற்றும் கிழங்கு மாவு போன்ற இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. இது சிலைகள் தண்ணீரில் கரையும் போது சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும். சிலைகளுக்கு வண்ணம் தீட்ட செயற்கை வண்ணங்களுக்குப் பதிலாக இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட வாட்டர் பெயிண்டிங் பயன்படுத்தப்படுகிறது. இது நீர்நிலைகள் மாசுபடுவதைத் தடுப்பதோடு, சிலைகள் கரைந்த பிறகும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காது.

விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடக் குறைந்த நாட்களே உள்ள நிலையில், சிலைகளை விரைவாகவும், அதே நேரத்தில் தரமாகவும் தயாரிப்பதில் சிற்பக் கலைஞர்கள் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகின்றனர். இத்தகைய சூழல் நட்பு சிலைகளின் பயன்பாடு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.










நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment