| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

சிகிச்சை பலனின்றி..! எஸ்.ஐ. உயிரிழப்பு...! இருவர் கைது..! பெரும் சோகம்...!

by Vignesh Perumal on | 2025-07-26 09:58 AM

Share:


சிகிச்சை பலனின்றி..! எஸ்.ஐ. உயிரிழப்பு...! இருவர் கைது..! பெரும் சோகம்...!

சென்னை எழும்பூர் மருத்துவமனை அருகே போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பர்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ.) ராஜாராமன் (53) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக அவரது நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு, எழும்பூர் மருத்துவமனை அருகே காவல் உதவி ஆய்வாளர் ராஜாராமன் தனது நண்பர்களான ராகேஷ் மற்றும் அய்யப்பன்  ஆகியோருடன் மது அருந்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியுள்ளது. தகராறு முற்றிய நிலையில், ராஜாராமன் தனது நண்பர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டதாகத் தெரிகிறது.

காயமடைந்த ராஜாராமன் உடனடியாக மீட்கப்பட்டு, எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜாராமன், இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து எழும்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையின் அடிப்படையில், ராஜாராமனைத் தாக்கிய அவரது நண்பர்களான ராகேஷ் மற்றும் அய்யப்பன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்தச் சம்பவம், தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 








நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment