by Vignesh Perumal on | 2025-07-24 10:40 AM
கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட ஆபரணத் தங்கத்தின் விலை, சென்னையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,000 குறைந்து, ரூ.74,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை குறைவு நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 24) ஒரு சவரன் (8 கிராம்) ரூ.74,040 (நேற்றைய விலையில் இருந்து ரூ.1,000 குறைவு) விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் ரூ.9,255 (நேற்றைய விலையில் இருந்து ரூ.125 குறைவு) விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஏழு நாட்களாகத் தொடர்ந்து அதிகரித்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் போர் பதற்றம், டாலரின் மதிப்பு உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் மற்றும் வெள்ளி மீதான முதலீடுகள் சமீப காலமாக அதிகரித்து வந்தன. இதன் காரணமாகத் தங்கத்தின் விலையும் வரலாறு காணாத வகையில் உயர்ந்தது.
இந்த நிலையில், சர்வதேச நிலவரங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாகத் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த விலை குறைவு, நகை வாங்கத் திட்டமிட்டிருந்தவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.