| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

15 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை...! வானிலை ஆய்வு மையம்...!

by Vignesh Perumal on | 2025-07-23 10:57 AM

Share:


15 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை...! வானிலை ஆய்வு மையம்...!

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று (ஜூலை 23) 15 மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலை ஆகிய 15 மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை, நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. காலை முதலே சென்னையில் குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது.

தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வெயில் முற்றிலுமாக குறைந்து சாரல் மழை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் குளிச்சியான சூழல் நிலவி வருகிறது.




நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment