by Vignesh Perumal on | 2025-07-22 02:22 PM
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை (ஜூலை 23) ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்குக் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இன்று (ஜூலை 22) நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (ஜூலை 23) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் வரும் நாட்களில் கனமழை தொடர வாய்ப்புள்ளது.
ஜூலை 24 மற்றும் 25 நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூலை 26 நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த இரண்டு நாட்களுக்கு (ஜூலை 23, 24) நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.