by Vignesh Perumal on | 2025-07-21 11:11 AM
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள வாகன நிறுத்துமிடங்களுக்கான ஒப்பந்தம் இன்றுடன் (ஜூலை 21) நிறைவடைந்தது. இதனால், மறுஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் வரை மாநகராட்சிக்குச் சொந்தமான வாகன நிறுத்துமிடங்களில் பொதுமக்கள் எவ்விதக் கட்டணமும் இல்லாமல் தங்கள் வாகனங்களை நிறுத்திக்கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
வாகன நிறுத்துக் கட்டண வசூல் தொடர்பான ஒப்பந்தங்கள் இன்றுடன் முடிவடைந்த நிலையில், புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் வரை மாநகராட்சிக்குட்பட்ட வாகன நிறுத்துமிடங்களில் கட்டணம் வசூலிக்கப்படாது என்று சென்னை மாநகராட்சி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் இனி எந்தவிதப் பணமும் செலுத்தாமல், இந்த இடங்களில் தங்கள் வாகனங்களைப் பாதுகாப்பாக நிறுத்திக்கொள்ளலாம்.
இந்த அறிவிப்பைப் மீறி யாரேனும் வாகன நிறுத்துக் கட்டணம் வசூலித்தால், அதுகுறித்து உடனடியாகப் புகார் தெரிவிக்கலாம் என்றும் மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. வாகன நிறுத்துக் கட்டணம் தொடர்பான புகார்களுக்கு பொதுமக்கள் 1913 என்ற உதவி எண்ணைத் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.